பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 6 கவிதை பயிற்றும் முறை குறிக்கோள் பலவிதமாகச் சோதிக்கப்பெறுகின்றது. இச் சோதனையிலிருந்து வெற்றியுடன் வெளிப்படுகின்றவர்களே உண்மையான ஆசிரியர்களாவர்; அவர்கள் குறிக்கோள் மாற லாம்; புதிய வடிவெடுக்கலாம். வாழ்க்கை என்பது மாற்றந் தானே? அது வளர்ந்து, துலக்கமடைந்து பயன் விளைவித்தால் தான் மாற்றம் அடைந்தது என்று கொள்ளுவதே சிறப்பு. சில ஆசிரியர்களின் தவறான முறை: கவிதை பயிற்றும் சில ஆசிரியர்கள் கவிதையின் அழகைச் சுவைக்காமவ், அதிலுள்ள உணர்ச்சியிலும் மெய்ப்பாட்டிலும் ஈடுபடாமல் அது கூறும் கருத்திலும் வடிவத்திலும், வேறு இலக்கணக் குறிப்புகளிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் கவிதைமங்கை யிடம் "உண்மைக் காதல்’ செலுத்தாதவர்கள். ஓர் அழகிய மங்கையை ஒரு வழிப்பறிக்காரன் குலைத்து அவள் அணிகலன் கள், ஆடைகள் முதலியவற்றைப் பறிப்பதுபோல், பாடலைப் பலவிதமாகச் சிதைத்துப் பாடல் கூறும் பொருளைப் பிழிகின் றனர். அதிலுள்ள அணிகள், பிற நலன்கள் ஆகியவற்றைக் களைந்து இன்பங் காண்கின்றனர். ஆனால் மாணாக்கர்கள் கவி தையில் சிறிதும் இன்பம் எய்துவதில்லை. மேற்கூறிய ஆசிரியரின் செயல்களால் அவர்களிடம் இயல்பாக அரும்பிக் கிடக்கும் கவிதை யுணர்ச்சியும் ஆர்வமும் வேரிலேயே சிதைக்கப்பெறுகின்றன. ஜார்ஜ் சாம்ஸன் என்பார் பொதுவாக இலக்கியத்திற்குக் கூறும் கூ ற் று கவிதைக்கும் முற்றிலும் பொருந்தும், 'இலக்கிய மங்கை பள்ளி ஆசிரியர்கள் கையிலும் தேர்வாளர்களின் கையிலும் சிக்குவது அவளது போதாக் காலமே; அவளது அழகையும் பொலிவையும்விட அவள் தரும் சீதனத்தையே முக்கியமாகக் கருதும் பேர்வழிகள் அவர்கள்’’’’ என்று அவர் கூறுவர். இதைக் கவிதை கற்பிக்கும் ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து தம் குறையுள்ள முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். பாடலை அறியச்செய் வதைவிட அநுபவிக்கச்செய்வதே-உணரச்செய்வதே-மிகவும் விரும்பப்பெறுவது என்பதை உணரவேண்டும். கல்வியின் பொருள்: கல்வி என்பதன் பொருளைச் சரியாக உணர்ந்தால், அதைப்போல் புனிதமான துறை வேறொன்றும் இல்லை என்பது தெரிய வரும். ஆண்டவன் படைப்பில் ஆற்றி வுடன் பிறக்கும் தெய்வ உருவங்கள் போன்ற சிறார்களுக்குக் 10 “it is the sorry fate of literature to fast into the hands of school masters and examiners who care for here dowry more than for har charms-Literature in the Clas Room byGeorge Sampson.