பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 85 கொண்ட உற்சாகத்தையும், வாழ்க்கையில் தாம் கொண்ட குறிக்கோள்களையும் மறக்கின்றனர்; நாளடைவில் அவை * பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்ல மெல்லப் போய்விடு கின்றன. யாராவது இளம் ஆசிரியர்கள் கவிதையை உற்சாகத் துடன் மேற்கொண்டு கற்பித்தாலும், நாங்களும் இளமையில் இப்படித்தான் இருந்தோம்; எங்களிடமும் இக் குறிக்கோள்கள் இருக்கத்தான் செய்தன என்று கிண்டல் செய்யும் மனப்பான் மையை அவர்களிடம் காண்கின்றோம். இத்தகைய மனப்பான் மையைக் கொண்ட ஒர் ஆசிரியரை நாம் என்ன சொல்வது?அவர் தம்முடைய தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளு கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். காலத் தேர்வுக்கு நிலைத்து நிற்காதவற்றை, ஏட்டுச் சுரைக்காய் போன்றவற்றை எங்ஙனம் குறிக்கோள்கள் என்று உரைப்பது? அவர் குறிக் கோள்களாகக் கருதுபவை யாவும் வெறும் கானல் நீர்; பொய்த் தோற்றம். உண்மையான காதல் சோதனை அலுப்பைத் தரு கின்ற, இடுக்கண்களும் இக்கட்டுகளும் நிறைந்த, வாழ்க்கையில் தான் உள்ளது. உண்மையான ஆசிரியர் கவிதையைப் படிப்பதில் தாம் இன்பத்தை நுகர்வதைப் போலவே, தம்முடைய பல்வேறு அலுப்பைத் தருகின்ற வேலையின் விவரங்களில்தான் காண்கின் றார். மாணாக்கர்கள் எழுதும் கட்டுரைகளைப் பக்தி சிரத்தை' யுடன் திருத்தி அவற்றிலுள்ள பிழைகளையெல்லாம் திரட்டி, வகைப்படுத்தி, அவற்றை வகுப்பில் எடுத்துக்காட்டி அவற்றைக் களையும் முறைகளைக் காண்பதில் அவர் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றார். இவ்விடத்தில் இளம் ஆசிரியர்கள் ஒன்றை நினைவில் வைத்தல் வேண்டும். வாழ்க்கையையோ தாம் மேற்கொண்ட வேலை யையோ உற்சாகத்துடன் தொடங்குவது எளிது; ஆனால், வாழ்க் கையின் ஒட்டம் நீண்டது; மிக நீண்டது. பெரும்பாலோர் உற்சா சுத்துடன்தான் தாம் மேற்கொண்டதுறையினைத் தொடங்குகின் றனர்.சிலர் விரைவில் தளர்ச்சியுற்றுப் பின்தங்குகின்றனர். வேறு சிலர் சில யாண்டுகள் வரை ஒரு மாதிரியாகத் 'தள்ளிச் செல்லு கின்றனர்.ஒருசிலர்தாம்.இறுதிவரையிலும் வெற்றியுடன் கொண்டு செலுத்துகின்றனர். இளம் ஆசிரியர்களின் உற்சாகத்தைக் கண்டு கிண்டல் செய்தவர்கள் வாழ்க்கையோட்டத்தில் முதலிலேயே பின்தங்கினவர்களாவர். என்றுமே உரைநடை வாழ்க்கையில் ஆழ்ந்திருப்பவர்கள் இளஞாயிறு எழுகின்ற காட்சியிலும் தன் மதியம் தவழ்ந்து ஒடும் காட்சியிலும் தம் உள்ளத்தைப் பறி கொடுக்காதவர்கள். கவிதையை யாங்கனம் பயிற்றல் முடியும்’ ஆசிரியர் வாழ்க்கையில், கற்பித்தல் துறையில் ஒருவருடைய