பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ கவிதை பயிற்றும் முறை வர்களை நாம் மறக்கவே முடியாது. துரியோதனன், தீமையில் ‘அண்ணனையே வென்ற துச் சாதனன், கன்னன், அசுவத்தாமன், அபிமன்யு, கடோற்கசன் போன்றவர்களும் வாழ்க்கையின் ஒவ்வோர் உண்மைகட்கும் பிரதிநிதிகள் போன்றிருப்பவர்கள். மானிட வாழ்க்கையில் பெரு நம்பிக்கை கொண்ட கவிஞர் கள் இத்தகைய மாத்தர்களைப் படைத்து நமக்குப் பல குறிக்கோள் பொருள்களை உணரச் செய்கின்றனர். சென்ற நூற்றாண்டிலிருந்து விரைவாக ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சி இந்த நம்பிக்கையைக் குலைத்து விட்டது என்று சிலர் கருது கின்றனர்; அதில் ஒரளவு உண்மை இல்லாமல் இல்லை. எனினும், ஐன்ஸ்டைன் போன்ற அறிவியல் மேதைகளிடம் இந் நம்பிக்கை இன்னும் ஆழமாகப் பதிந்து இருப்பதையும் நாம் காணாமல் இல்லை. அறிவு வேண்டுமானால் நாம் அறிவிய லறிஞர்களை நாடவேண்டும்; தத்துவ அறிஞர்களிடம் போக வேண்டும்; சமயாச்சாரியார்கனள அடைதல்வேண்டும். ஆனால், வாழ்க்கையின் உ ண் ைம க ைள உணர வேண்டுமாயின், கம்பன், சேக்கிழார், திருத்தக்கதேவர், இளங்கோ போன்ற கவிஞர் களைத்தான் அணுகுதல் வேண்டும். அவர்கள்தாம் வாழ்க்கையைப் பற்றிய திரிபற்ற காட்சிகளைக் காட்டுபவர்கள்; பொய்த் தோற்றங்களை மாற்றி மெய்த் தோற்றங்களாகக் காணச் செய் பவர்கள்; அஞ்ஞானத் திரையை அகற்றி மெய்ஞ்ஞானத்தைக் காட்டுபவர்கள். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு." என்ற வள்ளுவத்திற் கேற்ப உண்மை நிலையை உரைப்பவர்கள்: உணரவைப்பவர்கள். எதைச் சொன்னாலும் அழகு ததும்பக் கூறுபவர்கள். இவர்கள் இல்லது இனியது நல்லது என்று ஆன்றோர்களால் நாட்டப்பெற்றவற்றை மனங் கவரும் வண்ணம் செஞ் சொற்களால் எடுத்தோதுபவர்கள். எது உண்மையான குறிக்கோள்: மேற்கூறியவற்றை ஆசிரியர் நன்குணர்ந்து கவிதையை அணுகுதல் வேண்டும்: கவிதையைக் கற்பிக்கவேண்டும். பெரும்பாலும் ஆசிரியர்கள் உரைநடை உலகி லேயே வாழ்கின்றனர். தம்மைச் சிறந்த அநுபவமிக்கவர்களாகக் கருதுகின்றனர்; கவிதையில் சிறப்பொன்றுமில்லை என்று இவர் கள் எண்ணுகின்றனர். இளமையில் தாம் கவிதையின் பால் 9. குறள் . 855