பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 等岛 தனையும் பல படங்கள் போல் கவிந்துள்ள வாழ்க்கை நம்மைக் கவர்கின்றது; ஆனால், என்றுமே நமக்கு மன நிறைவினைத் தருவதில்லை. இத்தகைய வாழ்க்கையைப் பற்றிய உண்மை"ைசி தான் கவிதை எடுத்துரைக்கின்றது. இந்த வாழ்க்கையைப்பற்றித் தான் மாபெருங் கவிஞர்கள் பலபடக் கூறியுள்ளனர். இவர்கள் வாழ்க்கையின் கூறுகள் யாவற்றையும் ஆழ்ந்து காண வல்லவர் கள்; வாழ்க்கையின் பல்வேறு உண்மைகளை நாம் உணரும் வண்ணம் விளக்க வல்ல ஆற்றல் பெற்றவர்கள். சிலப்பதிகாரம்: மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற காவியங்களைப் படித்தால் இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும். பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் அவை நமக்குப் பல வாழ்க்கை யுண்மைகளை எடுத்துரைத்துக்கொண்டே யுள்ளன. கதிரியக்கப் பொருள்களிலிருந்து கதிர்கள் வெளிவரு வதைப்போல் பல உண்மைகள் அவற்றிடமிருந்து மானிட சமூகத் திற்கு வந்து கொண்டேயுள்ளன. "அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதும் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகத்?" நோன்றிய வாழ்க்கை உண்மைகள் மன்பதைக்குக் கிடைத்த உண்மைகள். சிலப்பதிகாரம் இவற்றை எடுத்துரைக்கின்றது. ஏனை: காவியங்களிலும் இத்தகைய பல வாழ்க்கை யுண்மை களைக் காணலாம். இவை மன்பதை என்றும் மறவாமல் நினை வில் இருத்தவேண்டிய உண்மைகள். காவிய மாந்தர்கள் சில உண்மைகளின் பிரதிநிதிகள்: அங்ங்ணமே, காவியங்களில் காணும் காவிய மாந்தர்கள் சிலரை என்றுமே நாம் மறக்க முடியாது. ‘இராமன் பின்புப் பிறந்தானும் உளன் என்னப் பிரியாத’, சேவையே உருவாகக் கொண்ட இலக்குவன், எண்ணில் கோடி இராமரிகட்கும் ஈடு இல்லாத பரதன்', சொல்லின் செல்வனாகிய அநுமன், வாலி, அங்கதன் தாரை போன்றவர்களை நாம் என்றுமே மறக்க முடியாது. அரக்கர்களிலும் வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலான மேகநாதன், கும்பகருணன், இராவணன், சூர்ப்பனகை, மாரீசன் போன்றவர்களும் நம் மனத்தை விட்டு என்றும் அகலார். பாரதத் திலும் வீடுவன், விதுரன், தருமன், அருச்சுனன், வீமன் போன்ற 8. சிலப்பதிகாரம் பதிகம். வரி (55.58)