பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கவிதை பயிற்றும் முறை எங்ங்ணம் கொண்டு செலுத்துவது? 'கவிதைகளை நெட்டுருச் செய்யவேண்டும் என்று மாணாக்கர்களை வற்புறுத்துவது விரும் பத்தக்கதன்று; அதுவும் நாம் தேர்ந்தெடுத்த கவிதைகளை நெட்டுருச் செய்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவது மிகக் கொடுமையாகும். எனவே, மாணாக்கர்கள் தாமாகவே தவிதை களின் பொருளுணர்ந்து, அவற்றின் அழகுணர்ந்து, விருப்பத் துடன் நெட்டுருச் செய்தலே சிறந்தது. சந்த நயமும், onಣಿ அழகும், பொருள் தெளிவும் உள்ள கவிதைகளை இளஞ்சிறார்கள் இயல்பாகவே விரும்புவர்; நாம் சொல்லாமல் அவர்களாகவே அவற்றை நெட்டுருச் செய்துவிடுவர். ஆகவே, மாணாக்கர் விரும்பும் பகுதிகளை மட்டிலும் நெட்டுருச் செய்தால் போது மானது, பள்ளி யிறுதித் தேர்விற்குரிய பகுதிகளில் நெட்டுருச் செய் வதற்கென ஒதுக்கப்பெற்றுள்ள பகுதிகளைப்போல் உயர்நிலை பள்ளிகளிலும் தொடக்கநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணாக்கர்கட்கும் சில கவிதைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மனப்பாடம் செய்தல்வேண்டும் என்று வற்புறுத்துதல் சரியன்று. வெளியார் நடத்தும் தேர்வாதலின் அவ் வகுப்பிற்கு அவ்வாறு செய்யப்பெற்றுள்ளது; பள்ளிகளே நடத்தும் தேர்வு களில் அம்மாதிரி ஆசிரியர் விரும்பும் பகுதிகளை நெட்டுருச் செய்யும்படி வற்புறுத்துதல் விரும்பத்தக்கதன்று. தேர்வுமுறை களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி,தேர்வுமுறை களுக் கேற்றவாறு பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் சிறிதும் பொருத்தம் அன்று. அது குல்லாய்க்கேற்ற தலையை அமைத்தல் பொன்றது. மாணாக்கர்கள் தாம் கற்கும் கவிதைப் பகுதிகளில் நல்லனவற்றை மட்டிலும் தாம் விரும்பும் அல்லது தம் மனத்தைக் கவரும் பகுதிகளைமட்டிலும் நெட்டுருச்செய்தால் போதுமானது. ஆசிரியர் தாம் கற்பிக்கும் பகுதிகளிலுள்ள பல்வேறு சுவைகளை எடுத்துக்காட்டினால், மாணாக்கர்களே தாம் நெட்டுருச் செய்ய வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். நமக்கு எல்லாப் பகுதிகளும் பிடிக்கின்றனவா? அதுபோலத் தானே மாணாக்கர்கட்கும் இருக்கும்? நெட்டுருச் செய்யவேண்டிய பகுதி கள் வெறுப்பும் சலிப்பும் தராமல் விருப்பும் பற்றும் ஊட்டக் கூடியனவாக இருந்தால், மாணாக்கர்களைக் கட்டாயப்படுத்தத் தேவை இல்லை; அவசியமும் இல்லை. குருட்டுத்தனமாக நெட் டுருச் செய்வதால் பயன் ஒன்றும் விளையாது; பொருள் தெளி வுடன் மனப்பாடம் செய்தால்தான் அப்பகுதிகள் மாணாக்கரின் மனத்தில் நிலைத்த இடம்பெறும். முழுப்பகுதிகளாக நெட்டுருச்