பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் 95 செய்தல் சிறந்தது; நீண்ட பகுதியாக இருந்தால், அதைக் கருத்து முற்றுப்பெற்ற சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு நெட் டுருச் செய்ய வழி காட்டலாம். உளவியல் உண்மைகள்: மனப்பாடம் செய்வதில் நினைவுச் செயல் பங்கு கொள்ளுகின்றது. கற்றலின் பயன் நிலைக்க வேண்டுமாயின், கற்றது நினைவிற்கு வரவேண்டும். முன்னர் நடந்தேறிய நிகழ்ச்சிகள்பற்றிய அநுபவத்தைப் பின்னர் வேண்டுமிடத்து அறிவதே நினைவு என்பது. நினைவின்றேல் கற்றலால் யாதொரு பயனும் இல்லை. கற்றலைத் தூண்டலின்’ துலங்கல்’ என்பர் உளவியலார். துலங்கல்கள் மூளையில் சுவடு களை விடுகின்றன. இவையே நினைவின் அடிப்படை. நம் அநுபவம் ஒன்றும் மனத்தில் சுவடுகளை விடாமல் மறை வதில்லை. இதனால்தான் ஒரு முறை நிகழ்ந்ததைப் பல நாட்கள் கழித்தும் நினைவிற்குக்கொண்டு வர முடிகின்றது. நினைவுச் செயலில் கற்றல்(அல்லது.மனனம்செய்தல்) இருத்துதல்’, நினைவு கூர்தல், மீட்டறிதல்" என்ற நான்கு பிரிவுகள் உள்ளன.இவற்றை நன்கு அறிந்தால்தான் நினைவுச் செயலை அறிந்தவர்களா வோம். பாடல்களை மனப்பாடம் செய்வதில் இவை எங்ங்னம் பங்குபெறுகின்றன என்பதைக் காண்போம். கற்றலில் ஆர்வம்: ஒரு செய்யுளை அல்லது செய்யுட் பகுதியை மனனம் செய்வதற்கு முக்கியமாக வேண்டப்பெறு வது கற்றவில் ஆர்வம். மாணாக்கர்களிடம் பாடல்களை மனப் பாடம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எழாவிடில், மனப்பாடம் செய்தலை வெற்றியுடன் கொண்டுசெலுத்தமுடியாது. பாடல் களின் சொல் வளம், பொருள் நயம், கற்பனை நயம், ஒலி நயம், சுவை முதலிய கூறுகள் பாடல்களைப் படித்து அநுபவிப்பதற்குத் துணை செய்பவை. பாடல்களைப் பயிற்றும் ஆசிரியர் இவற்றை மாணாக்கர்கள் உணரச்செய்து கவிதை இன்பத்தில் திளைக்கச் செய்தால் பாடல்களை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தூண்டப்பெறும், பாடல்கள் நினைவில் இருந்தால் தேவையானபோது ஒலித்து மகிழலாம். பிறரையும் மகிழ்விக்கலாம் என்பதை ஆசிரியர்கள் வற்புறுத்திக் கூறினால், மாணாக்கர்களிடம் மனப்பாடம் செய்யும் ஆர்வம் எழும். 2 gros Lá-Stimulus 3 goš assà-Response 4 si ps (4&sog asrsirih 63 igsb)-Learning or memorising 5 §gjäggð-Retention 5 நினைவு கூர் தல்-Recall 7 18 tou-go géo-Recognition