பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 6 கவிதை பயிற்றும் முறை மனம் விரும்பிக் கற்க முனைந்தால் கற்றல் விழுப்பயன் தரும். பாடல்களைத் திரும்பத் திரும்பப் படித்தால் அவை மனத்தில் நன்கு பதியும்; திரும்பத் திரும்பப் படித்தல் விருப்புடன் மேற் கொள்ளப்பெறல் வேண்டும். பொருள் விளக்கம் பெற்றிருத்தல்: பாடல்களின் பொருள் விளக்கம் பெற்றிருந்தால், மனப்பாடம் செய்தல் எளிதாக நடை பெறும். பொருளையறியாமல் மீண்டும் மீண்டும் படித்தலால் யாதொரு பயனும் விளையாது. பாடல்களின் பொருளைப்புரிந்து கொள்ளுதலை இரு முறைகளில் மேற்கொள்ளலாம்: (1) பாடல் களின் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளை (எ-டு: கருத்துத் தொடர்பு, சொற்றொடர்பு போன்றவை) அறிந்துகொள்ளமுயலல்; அஃதாவது, தேவையானால் அவற்றைப் பொருட்பொலிவுள்ள புதிய ஒழுங்கில்-கோலத்தில்-அமைத்துக் கொள்ளுதல்; (2) பாடல்களின் பொருளையும் குறிப்பிடத்தக்க அவற்றின் உட்கருத்தையும் நாம் முன்னமே அறிந்தவற்றுடன் இணைக்க முயலுதல். ஒப்புமைப் பகுதிகள் ஒன்றாக இணையும். எ-டு. எண்ட ருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்றன. ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டு தம்வயி றெற்றி பெற்றி விளிப்ப போன்றன கோழியே’ இராமன் முடிபுனைய வேண்டிய நாளுக்கு முதல் நாளிரவு கைகேயியின் அந்தப்புரத்தில் தசரதனுக்கும் கைகேயிக்கும் நடை பெற்ற போராட்டத்திற்குப் பிறகு, இரவு கழிந்து கோழிக.வு தலைக் கூறுவது இப் பாடல். தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம் . கையால் வயிறலைத்துக் காரிருள்வாய்-வெய்யோனை வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்’ . 8 அயோத் கைகேயி சூழ்வினை. செய், 47 9. நளவெண்பா-283