பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் 97 தமயந்தியின் பாதியாடையைக் கிழித்து உடுத்திக்கொண்டு அவளை விட்டு நளன் பிரிந்த பிறகு இரவு நீங்கி விடிந்தமையைக் கூறுகின்றது. இப் பாடல். ஒத்த கருத்துள்ள இப் பாடல்களை நினைவில் வைத்துக்கொள்ளல் எளிது. பாடல்களின் பொருள் விளக்கம் பெற்றால்தான் ஒப்புமைப் பகுதிகள் இன்னவை என்பது புலனாகும். முரணான கருத்துள்ள பாடல்களும் நினை விற்குத் துணைசெய்யும். நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.'" என்பது புறநானூறு. இதில் மன்னன் ஒரு நாட்டின் உயிராக உருவகப் படுத்தப்பெற்றுள்ளான். வையம் மன்னுயி ராக.அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னவன்' என்பது கம்பராமாயணம். இதில் மன்னன் ஒரு நாட்டின் உடலாகக் கூறப்பெற்றுள்ளான்; மக்கள் உயிராகக் கருதப் பெற்றுள்ளனர். முரண்பட்ட கருத்துகள் அடங்கிய இந்த இரண்டு பாடற் பகுதிகளும் நினைவிலமையத் துணையாகும். கால இடையீடு: பாடல்களை ஒரு தடவைப் படித்ததற்கும் அடுத்தமுறை படிப்பதற்கும் கால இடையீடு அல்லது வேறு செயல் நிகழ்ந்தால் பாடல்கள் மனத்தில் நன்கு பதியும். ஒரே தடவையில் உட்கார்ந்து படித்து மனப்பாடம் செய்வதை "மொத்தைப் பயிற்சி முறை என் நும், கால இடையிட்டு மனப் பாடம் செய்வதைப், பங்கிட்டுப் பயிற்சி முறை" என்றும் வழங்கு வர் உளவியலார். பின்னைய முறையே சிறந்தது என சோதனை மூலம் அவர்கள் கண்டறிந்துள்ளனர். நடைமுறையில் வேறு சில கூறுகளையும் நாம் மனத்தில் கொள்ளவேண்டும். இரண்டு தடவை படித்தலுக்கிடையேயுள்ள கால அளவைத் தக்க முறை யில் ஒழுங்கு படுத்தவேண்டும். கால இடையீடு மிகக் குறுகினா லும், அல்லது அது மிக நீண்டாலும், இம்முறையின் திறன் குறை யும். மேலும், இம்முறையை மேற்கொள்வது மனப்பாடம் செய்ய 10 புறம்.185 11 அயோ, மந்தரை சூழ். 25 12 6ltar $ sa SÚ uu^þ S GP uþ K-Mohod of massed pratice 18 ưi##i:(9ủ ủu?ý # qp sop-Mehod of distributed practica க-13