பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் } {}} படிக்கத் தொடங்கும்பொழுதே அவற்றின் இசையை முதலில் பற்றிக்கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது என்பது பெறப் படும். இதனால் கவிதையைப் படிப்பது எளிதாக இருப்பதுடன், முதல்தடவை படிக்கும்பொழுதே கவிதை அவர்கட்குக் கவர்ச்சி யாக அமைந்துவிடும். மாகந்தமும் மகரந்தமும் அளகந்தர மதியின் பாகந்தரும் துதலாளொடு பவளந்தரும் இதழான் மேகந்தனி வருகின்றது மின்னோடென மிளிர்பூண் நாகம்தனி வருகின்றது பிடியோடென நடவா." இராம - இலக்கும்னர்களையும் சீதையையும் சுமந்திரன் காட்டில் விட்டுச்சென்ற பிறகு, இராமனும் சீதையும் நடந்து சென்றதைக் காட்டும் இந்தப் பாடலின் பெருமிதத்தை இசை யுடன் படித்தால்தான் உணரலாம்; உணரமுடியும். மாணாக்கர் கள் முதல் தடவையிலேயே இசையுடன் படிக்கத்தொடங்கினால் அதன் கம்பீர நடையில் மிகவும் ஈடுபாட்டுடன் தோய்ந்துவிடு வர். தாய்மொழியாசிரியர்கள் இதை நினைவில்வைத்து மாணாக் கர்களிடம் கவிதையை இசையுடன் படிக்கும் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்தி விடுதல்வேண்டும். 2. கவிஞர்களின் வ்ரலாறு: கவிதையைப் பயில்வோருக்குக் கவிஞர்களின் வரலாற்றை அறிந்துகொள்ளத் தேவையில்லை என்பது இந்நூலாசிரியரின் கருத்து. சில மேனாட்டுத் திறனாய் வாளர்களும் இக்கருத்தினையே கொண்டுள்ளனர். சில கவிதை களைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் ஒரு சில நிகழ்ச்சிகளைக் கட்டாயம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும் என்றிருந்தால், அவற்றை மட்டிலும் தெரிந்துகொண்டால் போதுமானது. பள்ளி மாணாக்கர்களுக்கென்று கவிதை நூல்களைத் தொகுப்போர் இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நாம் தொகுக்கும் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் புறம்பாக வுள்ள கவிஞர்களின் வரலாற்றுக் குறிப்புகளைத் தம் நூல்களில் தரவேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்தல்வேண்டும். காளமேகத்தின் சில பாடல்களை (குறிப்பாக ஆசு கவிகளை) நன் 7. அயோ கங்கைப் દીઠ 4,