பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互g& கவிதை பயிற்றும் முறை முறையில் தெளிவாக உணரமேண்டுமானால் அவர் எமகண்டம்’ பாடிய வரலாற்றை (அவை புனைந்துரையாயினும்) அறிந்து கொள்வது அவசியமாகும்; அவருக்கும் அதிமதுர கவிக்கும் உள்ள பகைமையையும் பொறாமையையும்பற்றிய குறிப்புகளை தெரிந்து கொள்வது இன்றியமையாதது. அங்ங்னமே, இரட் டைப் புலவர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களுடைய பாடல்களை நன்கு புரிந்துகொள்ளுவதற்குத் துணையாக இருக் கும். அப்பாடல்கள் எழுந்த சூழ்நிலையை அறிந்தால் அவற்றின் உயிர்நிலைக் கருத்தைத் தெளிவாக அறிதல் இயலும், ஆசு கவியால் அகிலவுல கெங்கும் வீசு புகழ்க்காள மேகமே-பூசுரா விண்கொண்ட செந்தழலில் வேகுதே ஐயையோ மண் தின்ற பாணம்என்ற வாய்." என்பது ஒரு கையறுநிலைச் செய்யுள். இதை மாணாக்கர்கட்குக் கற்பிக்கும் வாய்ப்பு நேரிட்டால். அப்பாடல் எழுந்த சந்தர்ப்பத் தையும் சூழ்நிலையையும் அவர்கள் நன்கறியச் செய்தல்வேண்டும். அப்பொழுதுதான் மண்தின்ற பாணம் என்ற வாய்' என்ற தொடரில் அடங்கியுள்ள உணர்ச்சி வேகத்தை, இதயத்துடிப்பை, நன்கு உணரமுடியும். கீழ்க்கண்ட குறிப்புகளை மட்டிலும் அவர் கள் அறிந்துகொண்டால் போதுமானது. "இச் செய்யுளைப் பாடியவர்கள் இரட்டையர். இவர்களில் ஒருவர் குருடர்; மற்றவர் நொண்டி இருவரும் கவிதை பாடும் ஆற்றல் பெற்றவர்கள். பெரும்பாலும் இவர்களுடைய பாட்டு களில் முதலிரண்டடிகளை ஒருவரும், ம ற் ற இரண்டு அடிகளை இன்னொருவரும் பாடுதல் வழக்கம். குருடர் நொண்டியைத் தூக்கிக்கொண்டு, நொண்டி வழிகாட்ட, இருவரும் ஊர்ஊராகச் சென்று இறைவழிபாடு செய்வது வழக்கம். ஒருநாள் இவர்கள் திருவாரூர்க்குச் சென்று சிவதரிசனம் செய்து மண்டபத்தில் வந்து தங்கியிருந்தனர். இவருள் ஒருவர், நாண்என்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான் என்னும் அளவு பாடிவிட, மற்றவருக்கு அவர் விட்ட இடந் தொடங்கி ஏனைய அடிகளை நிறைவு செய்யத் தோன்றவில்லை. 8. தனிப்பாடல் தி, ட்டு முதற்பகுதி (இரட்டையர் பாடல் 11).