பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் 篮莎莎 இப்பாடற் பகுதியை அவர்கள் அம் மண்டபச் சுவரில் எழுதி வைத்து மற்றும் சில திருப்பதிகள் சென்று வணங்கி மீண்டும் அவ்வூருக்கு வந்தனர். அவர்கள் வந்தபொழுது வெண்பா முற்றுப் பெற்றும், அடியில் "காளமேகம்' என்று கையெழுத்திட்டிருப்ப தையும் கண்டனர். அவர்கள் எல்லையற்ற வியப்பெய்தினர். முற்றுப்பெற்ற வெண்பா, நாண் என்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான் மண்தின்ற பாணமே-தானுவே சீரா ரூர் மேவும் சிவனே நீ எப்படியோ நேரார் புரமெரித்த நேர். என்று அமைந்திருந்தது. மண் தின்ற பாணம்’ என்று சொன்ன புலவரைக் கண்டு அவருடன் அளவளாவ வேண்டும் என்ற ஆர்வத்துடன் அங்குள்ளவரைக் காளமேகத்தின் இருப்பிடத்தை வினவினர். அவர்கள் அன்றுதான் காளமேகம் இயற்கை எய்தினார் என்றும், அவரது உடல் சுடுகாட்டில் வெந்துகொண் டுள்ளது என்றும் அறிவித்தனர். அதைக்கேட்ட இரட்டையர் சுடுகாட்டிற்கு விரைந்து சென்றனர்; அப்பொழுதுதான் காள மேகத்தின் வாய்ப்பக்கம் தீப்பற்றி நன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. உடனே அவர்களின் சோகவுணர்ச்சி மேற்கண்ட'ஆசுகவியால்’ என்ற பாடலாக வடிவெடுத்தது.இந்த முகவுரைக்குப் பிறகு பாடலைச் செப்பலோசையுடன் படித்தால் மாணாக்கர் பாட்டிலுள்ள அவலச் சுவையை அறிவர்: மண் தின்ற பாணம் என்ற வாய்' என்ற தொடரின் சிறப்பையும் உணர்வர்: அதில் அடங்கியுள்ள உணர்ச்சியின் கொடுமுடி அவர் கட்குத் தென்படும்.’’’ இவ்விடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்தல் வேண்டும். நாம் கற்பிக்கவேண்டியது பாடலேயன்றி, பாடலைப் பாடிய கவிஞனின் வரலாறு அன்று. வேறு சந்தர்ப்பத்தில் வரலாற்றைக் கூற நினைத்தால், மாணாக்கர்களே தாம் படித்த கவிஞர்களை பற்றிய நூல்களிலிருந்து சுவையான கதையினை எடுத்துக் கூறு வர். ஆனால் சில ஆசிரியர்கள் கவிதையைப் பாடிய கவிஞனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வது மிகவும் இ ன் றி ய ைம ய | த து என்று கருதுவர். கவிதையைப் பற்றிய ஒரு திட்டமான உணர்ச்சியைப் பெறுதலே அதனைவிட மிகவும் முக்கியமானது. உண்மையாக நாம் கவிஞனை விரும்பி 9 . சுப்பு ரெட்டியார், ந: தமிழ் பயிற்றும் முறை (மூன்றாம் பதிப்பு). பக். (878 4)