பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் 113 யாப்பமைதி, சுவை வேறுபாடு முதலியவற்றை இக் காலத்திற் கேற்றவாறு அமைத்திருப்பதால் அது பொதுமக்கள் சுவைக்கும் காப்பியமாகத் திகழ்கின்றது. காவியத்தில் காணப்பெறும் சில அபூர்வக் கற்பனைகள், கனிந்தநாடகத் தன்மை, இடத்திற்கேற்ற யாப்பு அமைதி முதலிய கூறுகள் கல்விச் செருக்குடைய புலவர் களையும் களிப்பிக்குமாறு அமைந்துள்ளன. கவிதை பயிற்றும் ஆசிரியர் இத்தகையவற்றைக் காணும் திறனைத் தம் மாணாக்கர் களிடம் வளர்க்கவேண்டும். பாரதியின் கண்ணன் பாட்டு’ போன்ற பாடல்களில் உள்ளம் குழைந்து அநுபவிக்கும் பழக் கத்தை உண்டாக்க வேண்டும். இக்காலக் கவிஞர்கள் பாடிய பாடல்களைக் கொண்டு மாணாக்கர்களிடம் நல்ல கவிதையது பவத்தை வளர்த்து இடைக்கால, முற்காலக் கவிதைகளைத் துய்க்கும் பழக்கத்திற்குக் கொண்டு செலுத்தலாம். மாணாக்கர் களின் பெருமையெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் கானும் உண்மையின் அளவையும், கவிதைகளில் அவர்கள் கானும் அவர்களுடைய கவிதைத் திறன் அளவையும் பொறுத்தது என் பதை அடிக்கடி வற்புறுத்தவேண்டும். ஆசிரியரின் அன்றாடப் பள்ளி வாழ்க்கையிலிருந்தே இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தரலாம். மாணாக்கர்கள் எழுதும் கட்டுரைப் பயிற்சிகளைத் திருத்தும் ஆசிரியர்கள் அவர்கள் செய்த பிழை களையெல்லாம் சிவப்புக் கோடுகளால் சுட்டிக்காட்டித் திருத்து வதை நாம் அறிவோம். கட்டுரைத் திருத்தும் வேலை ஆசிரியரின் வாழ்க்கையின் ஒரு சுவையற்ற பகுதி என்பதும் நமக்குத் தெரியும் திருத்தப்பெற்ற தாம் எழுதிய கட்டுரையையே திரும்பப் பார்ப்ப தென்பது மாணாக்கரின் பள்ளி வாழ்க்கையின் ஒரு சுவையற்ற பகுதியாகும்; நம்முடைய மாணாக்கர் வாழ்க்கையைப் பின்னோக் கிப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு விளங்கும். இதற்குக் காரணம் என்ன? குறை காணும் மனப்பான்மையே இந்நிலைமையை உண்டாக்குகின்றது. இதனால் இளம் எழுத்தாளர்களை ஊக்கு விக்க வேண்டும் என்ற தம் முக்கிய நோக்கத்தைக் ஆசிரியர் மறந்துவிடுகின்றார். அவர்களை உற்சாகபடுத்தவேண்டும் என்ற எண்ணமே ஆசிரியரிடம் எழாமல் போகின்றது. ஆசிரியர் கட்டு ரையில் உள்ள குறைகளை எடுத்துகாட்டுவதற்குப் பதிலாக மாணாக்கர் எழுதிய கட்டுரையின் நல்ல கூறுகளையும் மட்டிலும் எடுத்துக்காட்டினால், மாணாக்கர்களும் தம் குறைகளைத் திருத்திக்கொள்வதில் ஆர்வங் காட்டுவர், ஒரு சில எழுத்துப் பிழைகள், சந்திப் பிழைகள், வாக்கியப் பிழைகள், கருத்துக் குழப்பம் ஆகியவை இல்லாவிட்டால், அவர்கள் கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் என்று வற்புறுத்தினால், மாணாக்கர் க-15