பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. I4 கவிதை பயிற்றும் முறை கள் தம் எழுத்து வேலையில் அதிக ஆர்வங்காட்டுவர்: சிறந்த படைப்புகளையும் உண்டாக்க முயலுவர், தம்மைவிட ஆசிரியர் தாம் கருதியவற்றை நன்றாக அணுகும் திறனுள்ளவர் என்பதை மாணாக்கர்கள் நன்கு புரிந்து கொண்டால், அவர்கள் நற் படைப்பை விரைவில் அணுகுவர். இந்த மனப்பான்மை மாணாக் கர்களிடம் உண்டாக்குவது ஆசிரியரின் திறனைப் பொறுத்தது. எனவே, கட்டுரை திருத்தும் வேலை மாணாக்கள் எழுத்து வேலை யைப் பரிவுடன் அணுகும் அடிப்படையில் அமைந்தால், அஃது உண்மையான திறனாய்வாகின்றது; ஆசிரியரும் உண்மையான திறனாய்வாள ராகின்றார். இத்தகைய ஒருமுறையையே கவிதை பயிற்றலிலும் மேற்கொள்ள வேண்டும். தொடக்கத்திலிருந்தே மாணாக்கர்கள் கவிதைகளில் அழகை தி திதில் ரு யும், அவ்வழகினூடே கவிதை உண்மையையும் காணும் பழக்கத் தையும் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். ஏட்டைத் துடைப்பது கையாலே-மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே வேட்டை அடிப்பது வில்லாலே-அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே. ' என்ற பாட்டில் வ ந் த ஒலியே திரும்பத் திரும்ப வருவதைத் தொடக்கநிலைப் பள்ளி மாணாக்கர்கள் நன்கு சுவைப்பர். பாட் டின் ஒலிநயமே அவர்கள் காதுக்கு இன்பம் அளிக்கும்; கருத்தும் அவர்கள் நிலைக்கேற்றவாறு அமைந்துள்ளது. கவிதையைப் படித்து அதுபவிக்கும் பழக்கம் சிறிது வளர்ந்ததும், கீழ்கண்ட பாடல்களைப் போன்றவை அவர்கள் மனத்தைக் கவரும். வாய்முத்தம் தாராமல் மழலையுரை யாடாமல் சேய்கிடத்தல் கண்டெனக்குச் சிந்தைதடு மாறுதையா; முகம்பார்த்துப் பேசாமல் முலைப்பாலும் உண்ணாமல் மகன்கிடக்கும் கிடைகண்டு மனம் பொறுக்கு தில்லை.ஐயா நீடும் மதியினைப்போல் நிலவெரிக்கும் செல்வமுகம் வாடிநிறம் மாறியதென் வயிற்றில்எரி மூட்டுதையா 13. பாரதியார் : அம்மாக்கண்ணு பா ட்டு.