பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் # 1 & பின்னி முடிச்சிடம்மா பிச்சிப்பூச் சூட்டிடம்மா? என்னும் மொழிகள் இனி எக்காலம் கேட்பன் ஐயா நெஞ்சில் கவலையெல்லாம் நிற்காமல் ஒட்டும் அந்தப் புன்சிரிப்பைக் காணாது புத்திதடு மாறுதையா' என்று மகன் இழந்த தாய் புத்தரிடம் முறையிடுவதாகக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள பாட்டுகளை அவர்கள் சுவைப்பர். பாட்டின் துயர உணர்ச்சி அவர்கள் உள்ளத்தைக் கவரும். பாட்டின் வடிவமும் ஒலியமைப்பு முறையும் எளிமை யாக இருப்பதால் மாணாக்கர்கள் அவற்றை விரும்பிப் படிப்பர். கீழ் வகுப்புகளில் மேற்கூறிய பாடல்களைப் போன்ற எளிமை யான பாடல்களை அதிகமாகப் படித்துப் பழக்கம் ஏற்பட்டால், திறனாய்தல் பழக்கம் தானாக அமைந்துவிடும். ஏராளமான பாடல்களைப் படித்துச். சுவைத்து அநுபவித்த பிறகு “திறனாய்வு தானாக முகிழ்க்கும். மகிழ்ந்து அநுபவித்தால்தான் எது மகிழ்ச்சி தருகின்றது என்பதைக் காணல்கூடும். அப்பொழுது தான் திறனாய்தல் உறுதியாக, அவர்கள் தரும் விளக்கமாக, அவர்களின் அதுபவமாக, வெளிப்படும். இதுவே கவிதைகள் அவர்கள் உள்ளத்தைத் தொட்டதற்குத் தகுந்த அறிகுறியாகும். இப்போதுதான் அவர்கள் கவிதையின் உண்மையை உணர்வர்; அதன். முருகுணர்ச்சியில் ஈடுபடும் திறனும் அவர்களிடம் ஏற். படும். இத்தகைய ஒரு நிலை மாணாக்கர்களிடம் எப்பொழுது ஏற்படும்? அஃது ஆசிரியர் அவர்கட்குக் கவிதை பயிற்றுவதைப் பொறுத்தது; சிறப்பாக அவர் பயிற்றுதலில் மேற்கொள்ளும் முறைகளையும் பொறுத்தது. 4. தொகை நூல்கள்: தாய்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் கள் சிறுவர்களிடம் கவிதைச் சுவையை வளர்ப்பதற்கு மேற் கொள்ளும் முறைகளுள் ஒன்று அவர்களிடம் தொகைநூல் களை' 'த் தொகுக்கும் பழக்கத்தை உண்டாக்குவதாகும். இன்று கீழ் வகுப்பு மாணாக்கர்களும் படிப்பதற்கேற்றவாறு பெரும் பாலும் எல்லாப் பருவ வெளியீடுகளிலும் 'சிறுவர் பகுதி’’ 14. கவிமணி, ஆசியஜோ தி 15, 6 or so & JT&-Anthloogy