பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 5 கவிதை பயிற்றும் முறை தனியாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. அதில் கதைகள், கவிதைகள் கட்டுரைகள், விடுகதைகள் முதலியவை காணப்பெறுகின்றன. தவிர, குழந்தைகட்கென்றும் சிறுவர்கட்கென்றும் பல சிறு கவிதை நூல்களும் வெளிவருகின்றன. இவற்றை படிக்கும் இளம் மாணாக்களிடம் அவர்கள் மிக விரும்பிச் சுவைத்த கவிதைகளைத் தொகுத்து வைக்கும் பழக்கத்தை உண்டாக்கலாம். வாரத்திற்கு ஒரு கவிதை வீதம் தொகுக்க வேண்டும் என்ற திட்டம் செயற் படச் செய்தால் ஆண்டொன்றுக்கு 52 கவிதைகள் சேர்ந்துவிடும். இஃது ஒரு சுமையான வேலையும் அன்று. வகுப்பில் கற்பிக்கும் கவிதைகளைத் தவிர இவை மிகையாகச் சேர்க்கப் பெற வேண்டியவை. நான்காம் வகுப்பிலிருந்து இப்பழக்கத்தை ஏற் படுத்திவிட்டால் பதினொன்றாம் வகுப்பு முடியும் பொழுது கிட்டத்தட்ட 500 கவிதைளை மாணாக்கர்கள் புதிதாகத் தெரிந்து கொண்டு விடுவர். சுவைக்கும் பழக்கமும் அவர்களிடம் நன்முறையில் அமைந்துவிடும். இம்மாதிரித் தொகுக்கும் கவிதைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதுவதைவிட ஒரே அளவுள்ள தனித்தனித் தாளில் எழுதுவது சிறந்தது; அதுவும் ஒரே பக்கத்தில்தான் எழுதவேண்டும் என்ற முறையையும் மேற்கொண்டால் பின்னும் அது சிறக்கும். இவ் வாறு எழுதப்பெற்ற தாள்களை இரு தொளையிட்டு இரண்டு அட்டைகளுக்கிடையில் கோத்து வைத்துக்கொள்ள வேண்டும். கவிதை,எங்கிருந்து எடுக்கப்பெற்றதோ அதுபற்றிய குறிப்பையும், கவிதையின் பொருள்பற்றிய தலைப்பையும் குறிக்கவேண்டும். கவிதையைத் தொகுத்த தேதியும் இருந்தால், தொகை நூல்' வளரும் விவத்தைக் காண்பதற்குத் தெளிவாக இருக்கும். தாய் மொழியாசிரியர்களும் இத்தகைய பழக்கத்தை மேற்கொள்ள லாம். இவர்கள் தாம் கற்பிக்கும் வகுப்புகட்கேற்றவாறு பல்வேறு நூல்களிலிருந்து பல்வேறு பொருள்கள் பற்றியும், சுவைகள்பற்றி யும் கவிதைகளைத் தொகுத்துவைத்தல் சாலப் பயன்தரும். ஆனால், மாணாக்கர்களிடம் இத்தகைய தொகை நூல் வளர் வதை ஆசிரியர் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட பழக்கத்தின் இன்றியமையாமையைச் சிறு வர்களின் சொற்களஞ்சியத்தைக்கொண்டு விளக்கலாம். தமிழ் அகராதியில் இலட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள சொற்களை மட்டிலுந்தான் ஒரு மாணாக்கன் அறிவான் என்பது அவனுக்குத் தெரியும் அதிலும் அவன் கையாளும் சொற்கள் இன்னும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். இங்ங்னம் மொழியின் ஒரு