பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் # 1 7 பகுதியே அவனிடம் வாழ்கின்றது'; அவனுக்குப் பயன்படவும் செய்கின்றது. அவன் கல்வி வளரவளர, கருத்துகளை வெளி யிடும் தேவையும் வளர்கின்றது. ஆனால், ஒருவருக்குத் தெரிந்த சொற்களில் குறைந்த அளவுள்ள சொற்களே அவர் கையாளு வனவாக இருக்கும்; இது மொத்தச் சொற்களஞ்சியத்தில் மிகச் சிறு பகுதியே. இவ்வாறு ஒரு மாணாக்கர்களிடம் வாழும் இந்த மொழிப்பகுதியை நாம் அவனுடைய 'சொற்களஞ்சியம்’ என்று குறிப்பிடுவோம். மொழிப்பாடத்தில் இந்தச் சொற்களஞ்சியத் தைப் பெருக்குவதே மொழியாசிரியரின் நோக்கமாக இருக்கும். இதனால் கருத்துகளைத் தெளிவாகவும் எளிதாகவும் வெளியிடும் திறன் மாணாக்கனிடம் வளரும். மேற்கூறிய சொற்களஞ்சிய வளர்ச்சி முறையையே கவிதை யிலும் கொண்டுசெலுத்தலாம். மாணாக்கன் ஏராளமான கவிதைகளைப் படித்திருக்கலாம். இம்முறையினாலும் அவனுக் குப் பல கவிதைகளைத் தெரியும் வாய்ப்பு நேரிடும். ஆனால், சரி யான முறையில் அவன் அறியும் கவிதைகள், அஃதாவது அவன் அடிக்கடிப் படித்துப் படித்துச் சுவைக்கும் கவிதைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையாகவே இருக்கும். ஒரு சில கவிதைகளே அவன் அன்றாடத் தேவைக்குப் பயன்பட்டு அவனிடம்'வாழும்”. இந்தக் குறை எண்ணிக்கைக் கவிதைகளே அவனுடைய கவிதைத் தொகுப்பாகும்; இவை அடங்கிய தொகுப்பையே நாம் மேலே "தொகை நூல்’ என்று குறிப்பிட்டோம். மாணாக்கனுடைய கல்வியின் தரத்திற்கேற்றவாறு இத்தொகுப்பு நூலின் தரமும் அமையும். கவிதைப் பாடத்தில் தேர்வு வைப்பதைவிட இம் முறையில் கவனம் செலுத்துவது நிறைந்த பயன் அளிக்கும். கவிதைப்பாடத்தில் மேற்கொள்ளப்பெறும் தேர்வு முறையில் இம்மாதிரியான தொகை நூலுக்கு மதிப்புத் தருவதில்லை. மாணாக்கர்கள் ஆழ்ந்து சுவைத்த கவிதைகளைபற்றிச் சிறிதும் கவனம் செலுத்தாது. மேம்போக்காகத் தெரிந்தவற்றிற்கே மதிப்பெண்கள் வழங்கப்பெறுகின்றன. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளிடங்கூட கவிதையநுபவமே இருப்ப தில்லை. கவிதைச் சுவை என்றால் கிலோ எவ்வளவு? என்று கேட்கக் கூடிய பலரை நாம் காணத்தான் செய்கின்றோம். கீழ் வகுப்புகளிலிருந்தே தொகை நூலை வைத்துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துவிட்டால், கவிதைச்சுவை அவர் களிடம் நிலையாகவே அமைந்துவிடும். கவிதையதுபவம் தம்