பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிப்பாடத்தில் கவிதை 3 எண்ணியே, அவற்றை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்று கருதியே, தம்முடைய வாணாட்களைக் கழிக்கின்றனர். இதை நன்கு தெரிந்து கொண்டே அவர்கள் அங்ஙனம் தம் முடைய காலத்தைக் கழிக்கின்றனர். தொடுவானத்தை நோக்கிச் செல்வோர் அதனை ஒரு நாளும் எட்டி அடைய முடியாத நிலை யைப் போன்றே இவர்கள் வகுத்துக்கொண்டே குறிக்கோளும் உள்ளது என்பது அவர்கட்கு நன்கு தெரியும். அங்ங்னமே, ஆசிரி யரும் தம்முடைய குறிக்கோளை அடைதல் வேண்டும் என்ற நோக்கத்தால் உந்தப்பெற்றுத் தம்முடைய முழு ஆற்றல்களை யும் அதில் செலுத்த வேண்டும்; தம்முடைய முழு முயற்சியை யும் கொண்டு செலுத்த வேண்டும். அவர்களுடைய வெற்றியை எவ்வாறு அளப்பது? எந்த அளவுகோலைக் கொண்டு அளப்பது? ஆசிரியரின் குறிக்கோளை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது என்று அளவிடுதலைவிடத் தம்முடைய மாணாக்கர்களை ஆசிரியர் எவ்வளவு உயரம் உயர்த்தியுள்ளார் என்று அளவிட்டு அறிவதே சிறந்தது. மாணாக்கர் முன்னிருந்த நிலையிலிருந்து எவ்வளவு உயர்ந்துள்ளனர் என்று காண்டலே வேண்டப்பெறுவது; விரும்பப்பெறுவறு. ஆசிரியர் தம்முடைய கற்பித்தலில் மேற்கொள்ளும் எல்லா முறைகளையும் இந்த அளவுகோலினைக் கொண்டே அளத்தல் நலம் பயக்கும். இதனையே அவர்கள் நடைமுறையில் மேற்கொள்ளுதல் வேண்டும். கவிதை பயிற்றலின் நோக்கம்: கவிதை கற்பித்தலிலும் இத் தகைய சிறந்ததொரு குறிக்கோளை வகுத்துக்கொள்ள வேண்டி யது தாய்மொழியாசிரியர்களின் தலையாய கடமையாகும். கவிதையைப் பயிற்றலே தாய்மொழிப் பாடத்தில் உயிர்நிலை போன்ற பகுதி. இதில் ஆசிரியர்கள் தாம் வகுத்துக்கொண்ட குறிக் கோள் நிலையை அடையவேண்டும் என்று முயல்வதே தமிழ்க் கவிதைகளைத் தக்க முறையில் பயிற்றுவதாகும். தாய்மொழி யாசிரியரின் வேலையைச் சோதிக்க வேண்டுமாயின், கவிதை கற்பித்தலில் அவருடைய வேலையைச் சோதிப்பதே சிறந்தது. தாய்மொழி பயிற்றலில் இப்பகுதியே மிக உயர்ந்தது; அவரு டைய பெரும்பான்மையான காலத்தையும் ஆற்றலையும் இப் பகுதியே விழுங்குகின்றது. கவிதை கற்பிப்பதில் வெற்றி கானும் தாய்மொழியாசிரியர் தம்முடைய துறையின் ஏனைய பகுதி களிலும் வெற்றியடைவார் என்பது ஒருதலை. ஆனால், ஒன்று; ஏனைய பகுதிகளில் வெற்றியுடன் பணியாற்றிக், கவிதையைப்