பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கவிதை பயிற்றும் முற்ை பயிற்றுவதில் வெற்றியடையாது போகவும் கூடும். கவிதை பயிற்றல் கடினமான துறை: தம்முடைய உணர்ச்சிகளையும் ஆற்றல்களையும் ஒருங்கு திரட்டிக் கொட்ட வேண்டிய துறை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கவிதை பயிற்றப்பெற வேண்டியதற்குக் காரணம் என்ன? கவிதை ஒரு கலை. கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடம்முருகுணர்ச்சியை வளர்ப்பதற் காகவும். தாம் காண்பனவற்றில் அழகைக் கண்டு இன்புறும் பயிற்சி பெறுவதற்காகவும் கவிதைப்பகுதி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பெறுகின்றது. இந்த இரண்டு நோக்கங்கட்கு மேலும் கவிதை பல விளைவுகளை உண்டாக்குகின்றது என்பது உண் மையே. ஆனால், அவை மாணாக்கர்கள் அழகினை உணரும் அளவிற்கேற்பவே உண்டாகும். கவிதை அழகு தருவதுடன் நின்று விடுவதில்லை: அது வாழ்க்கை உண்மைகளையும் தரு கின்றது. வாழ்க்கையைப்பற்றிய திறனாய்வுதானே கவிதை: கவிதையில் அழகே உண்மை ; ஏனைய கலைகளிலுள்ளதைப் போலவே, கவிதையிலும் அழகின்மூலமே உண்மையை அடை கின்றோம். அழகைப்பற்றி எண்ணாத இடம் இல்லை. அழகின் மாட்டு உலகம் கொண்டுள்ள பற்றைப்போல் வேறு எதன் மாட்டும் அது கொள்ளவில்லை. அழகு, அழகு என்று உலகம் அழகில் உறைந்து கிடக்கின்றது. “குருமணி உறைந்து உருண்டு திரண்டாலென இருள் சூழ்ந்த கொண்டல்முடியும், செஞ்ஞாயிற் றின் எழுகதிர் உமிழும் இளவெயிலில் ஒன்றி அழகு காட்டும் பச்சைப் பசுங்காட்டுப் போர்வையும், மணி கொழித்து முழ வார்த்துச் சங்கொலிக்கும் அருவியணியும், வண்டு யாழ்முரலலும் குயில் பாட்டும், மஞ்ஞையாட்டுங் கொண்ட ஒரு மால் வரைக்கு அழகு தந்தவர் யார்? ஞாயிறும் திங்களும் விண்மீன் களும் எவரால் இயற்றப்பெற்றன: நெருப்புக்கு வெம்மையும், புனலுக்குத் தண்மையும் ஊட்டியவர் யார்: இவை யாவும் இயல் பாக அரும்பியவை; கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப் பைக் கொண்டவை. முருகுணர்திறன். இத்தகைய அழகைக் காணும் முருகுணர்ச் சியை நாம் மாணாக்கர்களிடம் வளர்க்கக் கூடுமாயின், இவர்கள் கல்வி நிலையங்களைவிட்டு வெளிவந்த பிறகும் யாண்டும் எதி லும் அழகினையே காண்பர்; ஒலியிலும் ஒளியிலும், சிந்தை யிலும் செயலிலும் அவர்கட்கு அழகு தட்டுப்படும். இந்நிலை எய்தப்பெற்றால், கல்வியின் விழுமிய பயனையே இவர்கள் 6. திரு. வி. க. முருகன் அல்லது அழகு-பக் (47-48)