பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கவிதை பயிற்றும் முறை களை நாளிதழ்களில் செய்திகளைப் படிப்பது போன்று படிப்ப தால் பயன் இல்லை. செய்திகளைக் கூறும் நாளிதழ் நிருபர் நிலை வேறு; உணர்ச்சிகளைச் சித்திரித்துக்காட்டும் பெருங்கவி ஞனின் நிலை வேறு. கவிஞன் சித்திரிக்கும் நிகழ்ச்சி ஒன்றினைப் பார்ப்போம். போர்க்களத்தில் மேகநாதன் மலரவன் படையை ஏவி மாயமாய் மறைந்து விடுகின்றான். இராமன் பக்கலில் உள்ள அனைவரும் இறந்து படுகின்றனர்: இக்காட்சியைக் கண்ட இராமனும் சோகத் தால் மூர்ச்சை அடைகிறான். இந்நிலையை இராவணன் அரக்கி மார்களைக் கொண்டு சீதைக்கு நேரில் காட்டச் செய்கின்றான். அதைக் கண்ணுறும் மிதிலைச்செல்வி 'தண்டாமரைப் பூ நெருப் புற்ற தன்மையுறுகின்றாள்'. அவள் அடைந்த நிலையை இவ் வாறு கம்பன் நமக்குக் காட்டுவான்: மங்கை அழலும், வாணாட்டு மயில்கள் அழுதார் மழவிடையான் பங்கில் உறையும் குயில்அழுதாள்; பதும மலர்மேல் மாதழுதாள்; கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள், கமலத் தடங்கண்ணன் தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாருந் தளர்ந்தழுதார். அடித்தாள் முலைமேல்; வயிறலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல்வீழ்ந்த கொடித்தான் என்ன மெய்சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்; துடித்தாள்; மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள்: சுழன்றாள்; துள்ளினாள்; குடித்தாள் துயரை உயிரோடும்; குழைத்தாள்; உழைத்தாள்; குயிலன்னாள். விழுந்தாள், புரண்டாள்; உடல்முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்; எழுந்தாள்; இருந்தாள் மலர்க்கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்: ஏங்கினாள்: கொழுந்தா என்றாள்; அயோத்தியர்தம் கோவே! என்றாள்; எவ்வுலகும் தொழுந்தாள்: அரசே! ஒ என்றாள்; சோர்ந்தாள்: அரற்றத் தொடங்கினான். : 4. புத்த-சீதை களங்கண். 5,6,.