பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி § இப்பாடல்களில் கம்பனுடைய உணர்ச்சித்துடிப்பைக் காண் கின்றோம். சீதையின் சோக உணர்ச்சியைச் சித்திரிக்கும் தானும் சீதையின் சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றான்; சோக வடிவ மாகின்றான். பாட்டுகளுக்கு உயிரூட்டிப் படிக்கும் நம்மையும் சோகக்கடலில் மூழ்கவைத்து விடுகின்றான். சோகத்தாலாகிய நங்கையின் உணர்ச்சியை நாமும்பெற்று விடுகின்றோம். கவிஞன் செய்யும் இதே வேலையைத்தான் கவிதைகளைக் கற்பிக்கும் ஆகிரியர்களும் தம் மாணாக்கர்களிடம் உண்டு பண்ண வேண்டும். இவ்வாறு கவிஞன் பாத்திரங்களின்மீது ஏற்றிக் கூறும் உணர்ச்சி களையும் கவிக்கூற்றாகக் கூறும் உணர்ச்சிகளையும் மாணாக்கர் களிடம் எழச் செய்து விட்டால்அதுவே ஆசிரியர் தம் கடமையில் கண்ட வெற்றியாகும். முதலில் ஆசிரியர் உணர்ச்சிவயத்தரானால் தான் அவ்உணர்ச்சி தம் முன்னுள்ள மாணாக்கர்களிடமும் பரவும்: அவர்களும் உணர்ச்சி வயத்தராவர். உணர்ச்சி கிளர்ந் தெழும் தன்மையும் அவர்களிடம் தானாக வளரும். பலவேறுகிலை மாணாக்கர்கள்: சில மாணாக்கர்கள் கவிதை யைத் தாமாகப் படித்துச் சுவைக்கும் திறனைப் பெற்றிருப்பர். ஆசிரியர் கவிதையை உணர்ச்சியுடன் கற்பித்தாலும் சரி, கற் பிக்காவிடினும் சரி, அவர்கள்தாமாகவே கவிதைகளின் உணர்ச்சி யைப் பெற்று விடுவர். ஆனால், சராசரி மாணாக்கர்களிடம் இத்திறன் அமைந்திருக்கும் என்பது ஐயமே. ஆசிரியர்தாம் தம்முடைய கற்பிக்கும் திறனால், கவிஞனின் உணர்ச்சியை மாணாக்கர்களிடம் கிளர்ந்தெழச் செய்தல் வேண்டும். கவிதையைக் கேட்டு அநுபவிக்கும் கேள்விப்புலன் சிலரிடம் மட்டிலுமே அமைவது என்று சிலர் கூறலாம். இதில் உண்மை இல்லாமல் இல்லை. சிலரிடம் இசைக்கலையின் கேள்வி உணர்வு இல்லை; ஆனால் அவர்கட்கு இசைக்கலையைக் கற்பிக்கும் பொறுப்பு தருவதில்லை. ஆயின், இசையைக் கேட்டநுபவிக்கும் உணர்வு இருந்தால், சரியான பயிற்சியினால் அவ்வுணர்வை வளர்க்கலாம். கவிதை கற்பித்தலிலும் அப்படித்தான். கவிதை யைப் படித்து அநுபவிக்கத் தெரியாதவர்களிடம் கவிதையைக் கற்பிக்கும் பொறுப்பைத் தருவதால் என்ன பலனை எதிர்பார்க்க முடியும்? ஆனால், அத்தகையோர் ஒரு சிலர்தாம் இருப்பர். பெரும்பாலான மக்கள் கவிதையை உணர்ந்து படிப்பதைக்கேட் அநுபவிக்கும் திறனைப் பெற்றிருப்பர். ஆசிரியரின் பொறுப் பெல்லாம் அத்தகைய திறனை மாணாக்கர்களிடம் வளர்த்து விடு வதேயாகும். ரசிகமணி டி. கே. சி. அவர்கள் தாய்மொழியை வெறுத்து ஆங்கில மோகத்தில் இருந்தவர்களையெல்லாம் தாய் க-2