பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I G கவிதை பயிற்றும் முறை மொழிக் கவிதைகளைச் சுவைக்கும்படி செய்ததை நாம் அறிகின் றோம். மதமாற்றம் செய்யும் பாதிரியாரிடமுள்ள திறன் டி. கே. சி. அவர்களிடம் அமைந்திருந்ததை அவருடைய நண்பர் கள் நன்கு அறிந்திருந்தனர். சுவைஞர்களின் கூட்டத்தில் டி.கே.சி. அவர்கள் ஒரு சுவைக்குன்றுபோல் காட்சியளிப்பார்; அவரிட மிருந்து சுவை அலைகள் மின்விசைபோல் மெதுவாகப் பரவிச் சென்றுசுவைஞர்களை அடைந்துவிடும். சிறிதுநேரத்தில் சுவைஞர் கள் அனைவருமே சுவைக்குன்றுகளாகிவிடுவர். சுவைஞர்களின் கூட்டம் சுவைக்கடலாக மாறிவிடும். இத்தகைய நிலையினை ஆசிரியர் கவிதை வகுப்புகளில் நிலவும்படி செய்தல் வேண்டும். தமிழ்க்கடல் ராய.சொ. அவர்கள் காரைக்குடி இந்துமதாபிமான சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று இத்தகையதொரு சூழ்நிலையை நிலவச்செய்ததைக் காரைக்குடி இலக்கிய அன்பர் கள் நன்கு அறிவர். சில ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை: சில ஆசிரியர்கள் கவி தைப் பாடத்தை உணர்ச்சிக்குரிய பாடம்போல் கற்பிக்காமல் அறிவுக்குரிய பாடமாகக் கற்பிப்பதைக் காண்கின்றோம். அவர் கள் வரலாற்று விவரங்கள், புவியியல் குறிப்புகள், தன்-வர லாற்று நிகழ்ச்சிகள் பல்வேறு கதைக்குறிப்புகள், சொல்லிலக் கணக் குறிப்புகள், அணிவகைகள் முதலியவற்றில் அதிகக் கவனத் தைச் செலுத்திக் கற்பிக்கின்றனர். இம்முறையில் கற்பிக்கப் பெறும் மாணாக்கர்கள் கவிதையைத் தவிர ஏனைய அனைத்தை யும் அடைவர் இவ்வாறு கற்பித்தற்குக் காரணம் என்ன? கவிதை அவர்களிடம் இல்லை. கவிதை உள்ளமும் அவர்களிடம் இல்லை. அதனால்தான் அவர்கள் கவிதையை உயிரியல் ஆய் வாளர் ஆய்வுப்பொருளை ஆய்வகத்தில் சிதைத்துக் கூறுபடுத்தி ஆராய்வதுபோல் கவிதை ஆராய்ச்சி நடத்துகின்றனர்! இத் தகைய குறிப்புகள் யாவும் மாணாக்கர்களுக்குத் தேவையில்லை என்பது இந்நூலாசிரியரின் கருத்தன்று. அவற்றைக் கற்பிக்கும் இடம் வேறு சந்தர்ப்பமும் வேறு. கவிதைச் சுவையில் மாணாக் கர்களை ஈடுபடுத்தும்போது அவை கூடா என்பதே கருத்தாகும். கவிதைகளைப் பயிற்றும்,ஆசிரியர்கள் என்றும் கவிதைகளைப் பயின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று மேலே கூறினோம் அல்லவா? அவ்வாறு பயின்றவண்ண மிருந்ததால்தான் ஆசிரிய ரிடம் கவிதை உயிருடன் நிலவும். ஆசிரியர் தாம் கற்ற கவிதை கள் தம் தொழிலுக்குப் போதும் என்று எண்ணிக் கவிதைகளைப் படிப்பதையே நிறுத்தி விடுவாராயின், அவர் முன்னேற்றத்தை விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாகப் பின்னோக்கிச்