பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : கவிதை பயிற்றும் முறை கன்னனுடைய புண்ணியமனைத்தையும் கண்ணன் பெற்று அவன் கேட்ட வரங்களையும் தருகின்றான்; அன்றியும், ‘கூற்றுறழ், கராவின் வாயினின்றழைத்த குஞ்சர ாசன முன அன்று தோற்றிய திருமாலின் தரிசனமும் கன்னனுக்குக் ఇన్కా கின்றது. தன் கடமையை முடித்துக் டுகாண்டமைக்காகவும். இம் மையிலேயே அமலநாரணத்ை தான் காணப்பெற்றதற்காகவும் பெருமகிழ்ச்சியுற்றுத் தன் மகிழ்ச்சியைக் கண்ணனுக்கு இவ்வாறு தெரிவிக்கின்றான் கன்னன். தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோ டெதிர் மலைந்து தறுகண் ஆண்மைச் செருவிலென துயிரனைய தோழற் காகச் செஞ்சோற்றுக் கடன்கழித்தேன்; தேவர் கோவுக்கு உரைபெறுநற் கவசமுங்குண்டலமும் ஈந்தேன்! உற்றபெரு நல்வினைப்பேறு உனக்கே தந்தேன் மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்த வாறே. வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்; மதிபெற்ற திருவுளத்தபான் மதிக்கப் பெற்றேன்; தேன்பெற்ற துழாயலங்கற் களப மார்பும் திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்: ஊன்பெற்ற பகழி பினால் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்; யான்பெற்ற பெருந்தவப்பே றென்னை யன்றி இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே!" ஆசிரியரும் தம் வாழ்நாள் முழுவதும் எத்தனையோ சிறுவர் கட்கு அறிவினை நல்கி அவர்களின் முகமலர்ச்சியைக் கண்ணாரக் கண்டு அநுபவத்திருப்பார். இந்த அநுபவந்தான் அவர் பெற்ற பேறு. அதிகம் சொல்வானேன்? மேற்கண்டஇரண்டு பாடல்களை யும் மாணாக்கர்கட்குக் கற்பிப்பதாகக் கொள்வோம். போர்க் களத்தில் கன்னனும் கண்ணனும் இருந்த சூழ்நிலயையே 'வகுப் பில் திரும்பப் படைத்து மாணாக்கர்களைக் கவிதைச் சுவை யின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்தினால் அவர்கள் முகத் தில் இன்பம் ததும்பியோடும்; அவர்கள் முகமலர்ச்சியே இதனைக் காட்டும். இதனை ஆசிரியர் கண்ணுறும்பொழுது அவரும் பேiன்பக் கடலில் மூழ்குகின்றார். இப்படி ஆசிரியர் எத் தனையோ வாய்ப்புகளைக கண்டிருப்பர். இந்த அநுபவமே அவர் தம் துறையில் பெறும் உண்மையான ஊதியமாகும். 5. வில்லி பாரதம்-பதினேழாம் போர்.248, 249