பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி 13 ஆசிரியத் துறையின் சிறப்பை இன்னோர் எடுத்துக் காட்டாலும் விளக்கலாம். சாதாரண மனிதருக்கு இல்லாளின் அன்றாடத் தொண்டு முடிவில்லாத சலிப்பாகத் தோன்றலாம்: சலிப்பும் அலுப்பும் தரக்கூடிய ஒவ்வொரு சிறு விவரங்களையும் கவனிக்க வேண்டிய தொல்லை தரும் பணியாகவும் தோற்றலாம். இத்தனையும், 'பொய்யான காயத்திற்கும் காற்றடைத்தபைக் கும்’ செய்கின்ற செயல்கள்தாமே என்றும் அவர் நிளைக்கலாம்! ஒருவருக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்தநாள்தொட்டு இத் சிறு விவரங்களையும் கண்ணுங்கருத்துடன் யாதொரு சலிப்புமின் றித் தொடர்ந்து அவள் செய்து வருவதற்குக் காரணம் என்ன? அவளது தன்னலமா? இல்லை. இவை யனைத்தையும் ஒன்றாகப் பிணிப்பது ஒன்றே ஒன்றுதான்; அதுதான் அன்பு: குடும்பத்தின் மீது அவள் கொண்டுள்ள அன்பு. தன் துணைவனின் நலம், தனது செல்வச் சிட்டுக்களின் நலம் ஆகியவற்றைக் கவனிப்பதையே தன் கடன் எனக் கொண்டு பின் தூங்கி முன் எழும் பேதையர் களால்தாம் இவ்வுலகம் இதுகாறும் நிலைபெற்று வருகின்றது. இத்தகைய குடும்ப விளக்குகள்'தாம் இவ்வுலகத்தை நன்முறை யில் இயங்கச் செய்கின்றனர். இத்தகைய பொறுப்புகளையும்தன் "திருமணத்தன்று பெறுகின்றாள் குடும்பத் தலைவி. இத்தலைவி யின் பொறுப்பைப் போன்றதுதான் ஆசிரியரது பொறுப்பும். அவள் பல தொல்லைகளை மறந்து தன் கடமையிலேயே கவனம் செலுத்துவதைப் போலவே, ஆசிரியரும் தம் அவலக்கவலைகளை யெல்லாம் மறந்து தாமும் கவிதை இன்பத்தில் திளைத்து தம் மிடம் பயிலும் சிறுவர்களையும் அதில் திளைக்கச் செய்யவேண்டி யவராக உள்ளார். ஆசிரியப் பணியை ஏற்ற அன்றே அப்பொறுப் புகள் அவரை வந்தடைகின்றன. ஆசிரியர் அடையும் மகிழ்ச்சி: கல்வியின் முக்கிய நோக்கங் களுள் ஒன்று சால்பினை" வளர்ப்பது. ஆசிரியர் இதில் கவனம் செலுத்தாவிடில் சால்பிற்கு எல்லைக் கோடுகளை யாவர்தாம் வரையறுப்பது? சால்பினை வளர்க்கும் பொறுப்பு ஆசிரியரை யன்றி வேறு எவரும் மேற்கொள்ள இயலாது. மேற்கொண்டா லும் தக்க பயனைக் காணல் இயலாது: ஆசிரியர்களே மாணாக் கர்களின் வீர வழிபாட்டிற்குரியவர்கள். ஆசிரியருக்கு அநுபவம் பெருகப் பெருகச் சால்பினை வளர்க்கும் பெருவழி மிகவும் வியப் பினைத் தருவதாக அமைகின்றது. அந்த வழியில் காணும் ஒவ் வொன்றும் புதியனவாகவே தோற்றமளிக்கும். நன்மையும் தீமை யும் தரும் ஆற்றலும், மகிழ்ச்சியையும் துன்பத்தையும் நல்கும் 6. &m sou-Character.