பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைத் தேர்தெடுத்தல் 艺翼 1300 வரை), பிற்காலம் (கி.பி. 1301 முதல் 1808 வரை), இக் காலம் (கி.பி. 1801 முதல் இன்றுவரை) என்று வரையறை செய்யப்பெற்றுள்ளன. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு காலப் பகுதியிலுள்ள பாடல்கள் எவ்வளவு இருக்கலாம் என்றும் வரையறை செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக வகுப்பிற்குச் சங்ககாலப் பாடல்கள் 35 விழுக்காடும். இடைக் காலபிற்காலக் கவிதைகள் 50 விழுக்காடும், இக்காலக் கவி தைகள் 15 விழுக்காடும் இருத்தல் வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகள் 100 வரிகள் இருக்கவேண்டும் என்ற குறிப் பும் பாடத்திட்டத்தில் காணப்பெறுகின்றது. கல்லூரி வகுப்புக் கட்கும் கிட்டத்திட்ட இதையொட்டிய பாடத்திட்டங்கள் வகுக்கப் பெற்றுள்ளன. எட்டாம் மேற்கூறியவாறு தொகுக்கப்பெற்ற பாடநூலிலிருந்து தம் முடைய மாதிரிப் பாடத்திற்கு எக்கவிதையைத் தேர்ந்தெடுப்பது என்ற சங்கடம் இளம் ஆசிரியரிடையே எழுகின்றது. இவர் அங்ங்னம் சங்கடப்படுவதற்குக் காரணம், கவிதைகளைத் தவறான நோக்கத்துடன் அணுகுவதேயாகும். மாணாக்கர்களி டையே தாம் கவிதை மாரிகளைப் பொழிவதற்கேற்ற அடிநில மாக அமையக்கூடிய கவிதையை அவர் தேடிக் கொண்டிருக்க லாம்; அல்லது வகுப்பின் அறிதிறனைச் சோதிக்கக் கூடிய கவிதையாக இருக்க வேண்டும் என்று ஒரு வேளை கருதலாம்: அல்லது தம்முடைய கவிதை அறம் உரைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் கருதலாம். இக்கருத்துகள் யாவும் உண்மை யான நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. நாம் ஒரு கவிதை யைக் கற்பிக்க வேண்டுமாயின், நாம் வேண்டுவது கவிதையே யன்றி நம்முடைய வினா விடுக்கும் திறன் அன்று; நம்முடைய கவி தைப் பாடத்தின் வெற்றியை-அப்பாடத்தில் மாணாக்கர் பெறும் களிப்பை-அளவாகக் கொண்டு மதிப்பிடவேண்டுமே யன்றி, நம்முடைய வினா விடுக்கும் ஆற்றலைக் கொண்டு அளத்தல் கூடாது. கவிதைப் பாடத்தில் வினா விடுக்கும் முறை மாணாக் கரின் மகிழ்ச்சிக்குத் துணை செய்தாலன்றி, வேறு நோக்கத்திற் கென அதனை மேற்கொள்வது சரியன்று; அதற்கு இங்கு இடமும் இல்லை. கவிதைகள் அறிதிறன் ஆய்வுகளுமன்று"; சில சமயம் அவற்றை அங்ங்ணம் ஆய்வுகளாக மேற்கொள்வதும் உண்டு. சிறந்த கவிதைகளில் அறங்கூறும் பண்பும் அமைந்திருப் பதில்லை. எனவே, அவர் பாடத்திற்கென மேற்கொள்ளப் 3 soft psor-intelligence 4 -###p sör -#tuaị *sir - Intelligence tests.