பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி 25 இலக்கணையின் நலம் பாராட்டுவதாக அமைந்துள்ளது இப் பாடல். பாட்டின் பொருள் வெளிப்படை. இதற்குள்ள நச்சினார்க்கினியர்ரின் உரை வருமாறு: 'கணவற்கு மெய்ம்முழுதும் இனிதாயிருத்தலின், கரும்பு. நல்லாருறுப்பெல்லாங் கொண்டு இயற்றலின், தேன். இவ்வுலகி லில்லாத மிக்க சுவையும், உறுதியும் கொடுத்தலின் அமிர்து. காமவேட்கைகளை விளைவித்து இனிய பண்தோற்றலின், மழலை யுடையதொரு யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின் திரு. நடையால் அன்னம். சாயலால் மயில். காலமன்றியும் கேட்டோர்க்கு இன்பஞ் செய்தலின், குயில். மன்னன் மகளே யென்றல் புகழன்மையின் மன்னன் பர்வாயென்றது, அவன் கண் மணிப்பாவை யென்பதுணர்த்திற்று: இனி இவள் கொல்லிப் பாவையல்லள், மன்னன் பாவையென்றுமாம். ேச டி ய ர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின், பூவை. நோக்கத்தால் torr gör.” நச்சினார்க்கினியரின் இந்த உரையால் பாடலின் சிறப்பு பன்மடங்கு உயர்ந்து விடுகின்றது: நம்முடைய சுவையறிவும் விஞ்சுகின்றது. பாட்டு ஜீராவில் போட்டுள்ள குளோப் ஜாமுன்’ போலாகின்றது. உரை கவிதையின் புதுப்பொருளில் நம் மனத்தை ஈடுபடுத்துகின்றது, என்றாலும், கவிதையைப்பற்றி எல்லாம் சொல்லி முடிந்தபின், நாம் உள்ளத்தால் உணர்வதே கவிதையின் உண்மையாகும். எனவே, ஆசிரியர் தாமே ஒரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொள்ளவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பது பெறப்படுகின்றது. அப்பொழுது தான் ஆசிரியர் தாம் உணர்ந்ததை மாணாக்கர்கட்கு நன்கு உணர்த்த முடியும். கவிதையைப்பற்றிய பல செய்திகளை ஆசிரியர் தெரிந்து கொண்டிருக்கலாம்; இவற்றை அவர் தகவல் களைத் தருவது போலவே கற்பிக்க முடியும். ஆனால் கவிதை யைப்பற்றிய உணர்ச்சி அவரிடம் இல்லாவிடில், மாணாக்கர் களிடம் அவ்வுணர்ச்சியை எழுப்புதல் முடியாது. கவிதையைப் பற்றிய உணர்ச்சி ஆசிரியரின் இதயத்திலிருந்து நேராகப் பாயாத வரை, அது மாணாக்கர்களின் இதயத்தைக் கொள்ளை கொள்ள இயலாது. கவிதை கற்பித்தலில், கவிதையை மாணாக்கர் களிடையே உயிருடன் வாழச் செய்வதே முக்கியமாக வேண்டப் படுவது; அஃதாவது, கவிதையின் அழகில் அவர்களைச் சொக்கும் படிச் செய்வது, மேலும் கற்பித்தலால் இம்மகிழ்ச்சியை உரம் பெறச் செய்யலாம். எனவே, நம்முடைய நோக்கம் கவிதையை க-4