பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவிதை பயிற்றும் முறை அறியச் செய்வதன்று: உணரச்செய்வது; அழகான பொருளை விரும்பச் செய்வது; அதன் பிறகு அவ்விருப்பத்தைப் புரிந்துகொள் ளும் முறையால் உரம்பெறச் செய்யலாம். ஒரு கவிதையை நாம் உணராதவரை அதைப் புரிந்துகொள்ள முடியாது: கவிதையி லுள்ள உணர்ச்சிகள் திரும்பவும்-படக்கப் பெறாதவரை, அக் கவிதை தயக்குப் புரிவதில்லை’ என்று முர்ரே என்ற அறிஞர் கூறியிருப்பது ஈண்டுச் சிந்தித்தற்குரியதாகும். இஃது உண்மை பாயின், ஆசிரியர் தம்முடைய கவிதைத் தொகுப்பிலிருந்தே கவிதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிற்சிக் கல்லூரியின் பணி: மேற்கூறியவற்றிலிருந்து ஆசிரி யt பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பகுதியின் பணிகளுள் இத்தொகுப்புப் பணியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றாகின் றது. இங்கு மாணாக்கர்கட்குப் பல பாடல்களைத் தாமாகவே படித்துச் சுவைத்துத் திரட்டும் பயிற்சியைத் தருதல் வேண்டும். தம்முடைய கவிதைச் சுவைகளில் ஒர் அசைக்க முடியாத நம் பிக்கைஏற்படும்படி செய்தல் வேண்டும். நாம் படிப்பில் காட்டும் புதிய வழிகளுக்கேற்பவும் புதிய நோக்கத்திற்கேற்பவும் பயிற்சிக் கல்லூரி மாணாக்கர்தம்முடைய சுவையை வளர்த்துக் கொள்ளக் கூடும். தாமாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் திறன் ஏற்படத் தொடங்கிவிட்டால், அவர்கள் சரியான பாதைகளில் செல்லு கின்றனர் என்று கொள்ளலாம். அவர்கள் கவிதைகளைக் கவிதை களுக்காகவே படித்துச் சுவைக்கத் தொடங்கிவிட்டனர் என்றும், தம் இதயம் களிப்படைவதற்கேற்றவாறு புதிய கவிதைகளைக் கேட்க விரும்புகின்றனர் என்றும் நம்பலாம். கற்பிப்பதற்கென்று அவர்களிடம் கவிதைகள் சேரத் தொடங்கும், அன்றியும், அவர் களிடம் பயில வரும் மாணாக்கர்களையும் கவிதைகளைத் தேர்ந் தெடுக்கும் பணியில் உய்ப்பர். நினைவிலிருத்த வேண்டியது: நம்முடைய கவிதைத் தொகுப் பிலிருந்து பாடல்களைத் தேர்ந்தெடுக்குங்கால் ஒன்றை நாம் நினைவிலிருத்தல் வேண்டும். நம்முடைய கவிதைத் தொகுப்பி லுள்ள சிலவகைப் பாடல்கள் இளம் மாணாக்கர்கட்குச் சிறிதும் பொருந்தாமலிருக்கும். புரியாத மொழிநடை, கவிதையுணர்த்தும் கருத்து அல்லது உணர்ச்சியில் தெளிவில்லாமை சில பாடல் களைப் பொருத்தமற்றதாக்கக் கூடும். ஆனால் பல ஆசிரியர்கள் நினைப்பதுபோலன்றி, சிறுவர்களின் பாநலம் வியக்கும் ஆற்றல் 6. Professor G, Murray; The fnterpretation of Ancient Greek Literature