பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அறிமுகம் 33 வேறு முறையில் அவற்றின் பொருளை நிலைநிறுத்த முடியாது. ஆனால் பாடல்களின் பொருளையறியாது அவற்றின் உயிர் நாடியை யாங்ங்ணம் அறிந்து கொள்ள முடியும் என்றும், பாடல் களின் பொருளையறிவதற்குச் சொற்களின் பொருளை அறிந்து கொள்வது இன்றியமையாததன்றோ என்றும் வினவலாம். ஆம்: உண்மைதான். ஒரு முறை படித்தவுடன் பாடல்களின் பொருளை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது. ஏன்? இரண்டாம் முறை மூன்றாம் முறைகளில் கூடப் பொருள் புலனாகாத பாடல்களும் உள்ளன. அங்ங்ணமிருக்க, ஒன்றுமறியாக் சிறார்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்? புறப்பாடல்கள் போன்றவற்றின் பாடல்களிலுள்ள சொற்கள் மிகக் க டி ன மா ன ைவ; அ ப் பாட ல்க ளின் உயிர்நாடியை மாணாக் கர்கள் படித்தலினால் உணர்ந்துகொள்ளவே முடியாது. இத்தகைய பாடல்கள் மாணாக்கர்களின் அறிவுநிலைக்கு அப்பாற்பட்டவை: இவற்றைத் தனிப்பட்ட முறையில்தான் கையாள வேண்டும். இவற்றைக் கற்பிக்க நேரிடுங்கால் சொற்களின் பொருளைத் தொடக்கத்திலேயே விளக்கலாம்; அல்லது பாடல்கள் படிக்கப் பெறும்போதே விளக்கவும் செய்யலாம். சிலசமயம் பாடல்களின் கருத்தை முன்னதாகவே கூறிப் பாடத்தைத் தொடங்குவதுமுண்டு. சங்கப் பாடல்கள், சிலேடைச் செய்யுட்கள், பிள்ளைத்தமிழ்ப்பாட்டுகள் போன்றவற்றைக் கற்பிக்க நேரிடும்போது இப்போக்கைத்தான் மேற்கொள்ள வேண்டும். சிறிதளவு உதவி செய்யாவிடில் முதல் தட்வை படிப்பதால் மாணாக்கர்கள் பாடல்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. பெரும்பாலும் மேற்படிவங்களில்தான் இந்நிலை ஏற்படும். எப் போக்குகளை மேற்கொண்டாலும், முதலில் கவிஞனைப் பேச விட வேண்டும்; கவிஞனுக்குத்தான் முதலிடம் தரவேண்டும். கவிஞன்தான் தன் கருத்தைத் தெளிவாக, ஆணித்தரமாக, உணர்த்த் முடியும். இம்முறையில் கேவலமான போக்கும் உண்டு. சில சமயம் ஆசிரியர் பாடம் நடைபெறுங்கால் "இது முக்கியம், குறித்துக் கொள்க; இந்த அடியைக் கவனி; எவ்வளவு அழகாக உள்ளது! வருணனையின் வனப்பைக் காண்க்: வந்துள்ள அணியின் நயத்தை எண்ணி மகிழ்க்' என்றெல்லாம் கூறிக் கவிதை அநுபவத்தையே சிதைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்கும். இதை அறவே நீக்க வேண்டும். கவிதை கற்போர் கவிதைகளை நேரடியாக க-5