பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3彝 கவிதை பயிற்றும் முறை அநுபவித்தல் வேண்டும். கவிதைகளிலுள்ள கற்பனை நயம், தொடைகயம், அணிநயம் முதலியவற்றை யெல்லாம் மாணாக்கர் கள் தாமாகக் காணவேண்டும். ஆசிரியரே அனைத்தையும் சொல்லிவிட்டால், மாணாக்கர்களிடம் கவிதைச் சுவையறியும் திறன் எங்ங்ணம் அமையும்? அப் பயிற்சி எப்படி அவர்களிடம் வளரும்? ஆசிரியர் குறுக்கிடாது மாணாக்கர்களே நேரடியாகக் கவிஞனிடம் உறவு கொண்டால்தான் இப்பண்பு அவர்களிடம் நன்முறையில் வளரக்கூடும். ஆசிரியரின் விளக்கம் அல்லது விமர்சனம் கூறப்பெறுவதற்கு முன்பு மாணாக்கர்கள் குறைந்தது இரண்டு முறையாவது கவிஞனிடம் நேர்த் தொடர்பு கொள்ன வேண்டும். பிறகுதான், தாம் கவிதைகளைக் கற்பிககும்போது ஆசிரியர் அவற்றின் கற்பனை நயம் முதலியவற்றை - மாணாக் கர் உணராதிருந்தால்-கற்பிக்கத் தொடங்க வேண்டும். வினாக் களின்மூலம் சோதித்தால், பெரும்பான்மையானவற்றை மாணாக்கர்களே அறிந்து கொண்டிருப்பதைக் கண்டு ஆசிரியர் இறும்பூது எய்த நேரிடும். வேண்டுமானால், உறுதியான அது பவம் ஏற்படுவதற்கு அவற்றை வலியுறுத்தி விளக்கம் தரலாம். எனவே, மாணாக்கர்களே கவிதைகளைச் சுவைப்பதுதான் முறை; வேண்டப்படுவதும் அஃதே என்பதை அறிந்து பாடல்களை அறி முகம் செய்வது மிகவும் இன்றியமையாதது. குழ்கிலை காட்டும் முறை: கவிஞன் எந்தச் சூழ்நிலையில் கவிதையைப் பாடினானோ அந்தச் சூழ்நிலையை மாணாக்கர் கட்குக் காட்டிக் கவிதையின் உயிர்நாடியை அவர்கள் உணரும்படி செய்வது சூழ்நிலை காட்டும் முறையாகும். இம் முறையின் நோக்கம் மிகச் சிறந்தது; நல்லாசிரியர்களில் பெரும் பாலோர் இம்முறையைத்தான் மேற்கொள்கின்றனர். மாணாக் கர்கள் கவிதையின் அழகைக் காணத் தவறக்கூடும் என்று சிலர் எண்ணி, மாணாக்கரிடையே ஆவலாக எதிர்பார்த்து நிற்கும் பண்பை உண்டாக்க முனைகின்றனர். இது தவறு; பெருந் தவறுங்கூட. இவ்வாறு முனைவது ஆசிரியர் கவிதையைப் பாடிய கவிஞன்மீது அல்லது அதனைக் கற்கும் மாணாக்கர்கள்மீது நல்லெண்ணம் கொள்ளவில்லை என்றே கருத இடமுண்டா கின்றது. ஆசிரியர் நல்ல முறையில் கவிதையைப் படித்தால், அவர் குரல், படிக்கும் பாணி ஆகியவை மாணாக்கரின் கவனத்தை ஈர்த்துவிடும்; கவிதை தோன்றிய அல்லது கவிதை சித்திரிக்கும் சூழ்நிலையையும் மாணாக்கர் உணர்ந்து கொள்ளும் நிலையையும் காட்டிவிடும். பாரதியின் குயிற்பாட்டிலுள்ள பகுதி களை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். இவற்றுள்,