பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அறிமுகம் 35 குயில் தன் நெஞ்சைப் பறிகொடுத்தாகக் கூறும் பகுதியை ஈண்டுத் தருவோம். "கானப் பறவை கலகலெனும் ஒசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்றுநீர் ஒசை அருவி ஒலியினிலும், நீலப் பெருங்கடல் எந் நேரமுமே தான் இசைக்கும் ஒலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளரும்ஒரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் மொழியினிலும் சுண்ணம் இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும், பண்னை மடவார் பழகு.பல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள தாம்.ஒலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், வேயின் குழலோடு வீணைமுத லாம்.மனிதர் வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம்நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்' இந்தப் பகுதியை நல்ல முறையில் ஆசிரியர் படித்தால் பாட்டின் உயிர்நாடியை ஒரளவு மாணாக்கர் உணரக்கூடும். ஆனால், அவர் பாரதியைப்போல் படித்துக் காட்டமுடியாது; பாரதிதான் முறைப்படி படித்துக்காட்டக் கூடும். அவர் பாடின கவிஞரல்லவா? ஆசிரியர் படிக்கும்போது பாரதி காட்டும் பண்பில் ஒரு சிறிது தோன்றவே செய்யாது ஒழியினும் ஒழிய லாம். ஆனால், ஆசிரியர் படிப்பதிலிருந்தே மாணாக்கர்கள் கவி தையின் சிறப்பியல்புகளைக் காணட்டும்; கவிதையைப்பற்றிய எண்ணங்கள் அவர்கள் மனத்தில் உதிக்கட்டும். ஆசிரியர் கவிதையைப்பற்றிக் கூறுவதற்கு இடம் இல்லாமல் இல்லை; அதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் முதலில் கவிஞனைப் பேசவிடுவதுதான் முறை. கவிஞனே உயிரோ டிருந்து வகுப்பிற்கு வந்தால், ஆசிரியர் என்ன செய்வார்? அதைதான் அவர் இப்போதும் செய்ய வேண்டும். சில சமயம் சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுங்கூட்டத் திற்கு உள்ளுர்ப் பிரமுகர் ஒருவரைத் தலைவராகப் போடுவ 4. பாரதியார்: குயில்பாட்டு: வரி(28-44)