பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கவிதை பயிற்றும் முறை துண்டு. ஒவ்வொரு சொற்பொழிவாளரையும் அறிமுகம் செய்து வைப்பதில் தலைவர் தலையச்சுற்றி மூக்கைப் பிடிப்பார்; "அடியைப் பிடிடா, பாரதப்பட்டா' என்பதுபோல் அவர் பேச்சாளர்களின் குலம் கோத்திரங்களை யெல்லாம் சொல்லிக் காலத்தைக் கொலை செய்வார். சொற்பொழிவாளர்களின் பேக்சுகளைக் கேட்பதற்காகத் திரளாக வந்திருக்கும் மக்கள் கைகளைப் பிசைந்து கொண்டு தலைவர் எப்போது தாம் பேசுவதை நிறுத்திக்கொண்டு இருக்கையில் அமர்ந்து பேச்சாள ரைப் பேசவிடுவரோ என்று தம் வெறுப்பை முகக் குறிகளால் காட்டி நிற்பர். இந்தத் தலைவர் நிலைக்கும் கவிஞரைப்பற்றிக் கூறிக் காலத்தை வீணாக்கும் ஆசிரியர் நிலைக்கும் வேறு பாடில்லை. எனவே, ஆசிரியர் கவிஞனிடமும் மாணாக்கர்களிட மும் நல்லெண்ணங் கொண்டு விரைவாகக் கவிதையில்நுழைவதே சாலவும் ஏற்புடைத்து. தொகுத்தறி முறை: சிலர் தேர்ந்தெடுக்கப்பெற்ற வினாக் களைக்கொண்டு மாணாக்கரிடமிருந்தே கவிதையை வரு விப்பதற்கு முனைவதுண்டு. இதைத் தொகுத்தறி முறை என்று வழங்கலாம். முனைவதுண்டு என்றுதான் கூறினோம். ஏனெ னில் கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகிய மேதைகளின் சொல்லோவியங்களை யாண்டிலும் ஆற்றலிலும் குறைந்துள்ள மாணாக்கர்களிடமிருந்து எங்ங்னம் வருவிப்பது? சட்டியிலிருந் தால்தானே அகப்பையில் வரும்? இன்னும் யோசிக்கப்போனால் ஆசிரியரிடந்தான் அச்சொல்லோவியங்களைக் காணமுடியுமா? அன்றித் தேர்ந்தெடுக்கப்பெற்ற அவர் வினாக்கள், மாணாக்கர் தரும் விடைகளில் தேர்ந்தெடுக்கப்பெற்றவை ஆகியவற்றில் தான் பார்க்கமுடியுமா? ஒரு சில பாடல்களை இவ்வாறு தொடங்கலாம்; இதற்குப் பெருந் திறனும் வினவும் ஆற்றலும் இருக்கவேண்டும்; இவற்றைப் பெற்றுள்ள ஆசிரியர்கள் மட்டி லுந்தான் இம்முறையை மேற்கொள்ள முடியும். சில சந்தர்ப்பங் களில் இம்முறையை மேற்கொள்ளலாம்; ஆனால், இதைக் கற்பிக்கும்முறை என்று கொள்ளுதல் தவறு. வகுப்பில் ஒரு முறை படித்தவுடன் எளிதில் விளங்கக்கூடிய கவிதைகளை மட்டிலுத் தான் இங்ங்ணம் கையாளலாம். அழகை வருணிக்கும் கீழ்க் காணும் பாரதிதாசனின் பாடல்களை அறிமுகம் செய்யுங்கால் இம்முறையை மேற்கொள்ளலாம்: காலையிளம்பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்!