பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அறிமுகம் : மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்: ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில் அந்த அழகெ’ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள்? நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்: அடடே! செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தி னாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்." இப்பாடல்களை இசையுடன் படிக்கும்போதுதான் கவிதை தோன்றும். இவற்றிலுள்ள சொற்களையோ சொற்றொடர் களையோ கரும்பலகையில் எழுதிப் போட்டோ வேறு வித மாகவோ கற்பித்தலால் யாதொரு பயனும் விளையாது. பல்வேறு விதமான வினாக்களை விடுத்து மாணாக்கர்களிடமிருந்து கவி தையை வருவிக்கமுயல்வது ஆசிரியரின் திறமையை விளம்பரப் படுத்துலதாக முடியுமேயன்றி, கவிஞன் படைத்துக் காட்டியுள்ள கலையின் அழகைக் காட்டுவதாக அமையாது. ஓர் அழகான ஒவி யத்தில் ஒவ்வொரு கோடுகளின் நயத்தைக் கண்டு வியக்கலாம்; மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், அவை அவ்வோவியத்தின் கோடு களேயன்றி ஒவியம் அன்று. அக்கோடுகள். அனைத்தும் ஒன்று சேர்ந்து கலை வடிவத்தைக் காட்டி நிற்கின்றனவே, அதைக் காண்பதுதான் ஒவியத்தின் அழகைக் கண்டு மகிழ்தலாகும்; ஒவியத்தை முழுமையாகக் கண்டு மகிழ்வதுதான் கலையைத் துரய்த்தலாகும். தனிப்பட்ட கோடுகளில் அழகில்லை. அவற்றின் அழகெல்லாம், கலையின் அழகை மிகுவித்தலைப் பொறுத் துள்ளது. அதுபோலத்தோன் கவிதையிலும், எடுத்துக் காட்டாக, "அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்'. என்று கவிஞன் வாளா கூறி விட்டுவிட்டான். நோக்கினால் விளைந்த பயனைப்பற்றி யாதொன்றும் கூறவில்லை, அதன் பொருளைத்தான் வள்ளுவப் பெருந்தகை முன்னரே விரித்து விட்டாரே. 6 பாரதிதர்சன்: அழகின் சிரிப்பு- அழகு 1, 2 . 5 கம்ப.மிதிலைக் - 85,