பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைப் படித்தல் 墨莎 பாடலைப் படித்தல் அரிய செயல் என்று எண்ணிப் பாடலை ஈடுபாட்டுடன் படிக்கத்தொடங் ஆசிரியரிடமே இவ்வுணர்ச்சி எளிதில் தோன்றும். உண்மையில், பாடலைப் படித்தல் என்பது உள்ளத்தையே அசைத்து விடக்கூடிய செயல்தான்; உணர்ச்சி யுடன் படித்தல் பெறற்கரிய பேரின் பத்தை அடைவிக்கும் செயல். சில பாடல்களை உணர்ச்சியுடன் உரக்கப் படிக்கும்போது, அவ் வுணர்ச்சி உரக்கப் படிப்பதையே தடைப்படுத்தவும் கூடும். அங்ங்னம் உணர்ச்சியின் கொடு முடியினையே எட்டிப் பிடிக்கக் கூடிய அற்புதப்பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் எண்ணற்றவை உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றைத் தருவோம். மேகநாதன் இறந்து படுகின்றான். இராவணன் சோகக்கடலில் வீழ்த்துபுத்திர சோகத்தால் பலவாறு புலம்புகின்றான். ஆம், நெற்றிக்கண்ணன் மலையைப் பேர்த்தெடுத்தவனும், சுற்றுவனையும் ஆடல் கொண்டவனுமாகிய இராவணன்தான் புலம்புகின்றான். சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ நினைத்தது முடித்து நின்றேன்: நேரிழை ஒருத்தி நீரால் எனக்குநீ செய்யத் தக்க கடனெலாம் ஏங்கி ஏங்கி உனக்குநான் செய்வ தானேன் என்னின் யார் உலகத் துள்ளார்!" என்ற பாடல் சோகவுணர்ச்சியின் கொடுமுடியைக் காட்டு வதாகும். இறுதி இரண்டு அடிகளை உணர்ச்சியுடன் படிக்கும் போது, நமது தொண்டை அடைத்து மூச்சே நின்று போவது போன்ற நிலை நமக்கு ஏற்பட்டு விடுகின்றது. மூவுலகங்களையும் வென்று மும்மூர்த்திகளையும் ஏவற்படுத்தி வீர வாழ்க்கை வாழ்ந்த இராவணனையும் புத்திரசோகம் விட்டபாடில்லை. அம்பிகாபதியை இழந்த கம்பகாடன் அன்றோ இவ்வாறு பேசுகின் றான் இராவணன் வாயிலாக: இம்மாதிரி, கவிதையை உணர்ச்சி யுடன் படிப்பதுதான் கவிதை கற்பிக்கும் ஆசிரியனின் முதற் கடமை, முதலாய கடமையும் அதுதான். ஆசிரியர் நல்ல குரலைப் பெறாதவராக இருக்கலாம்; சிறந்த முறையில் படிக்கும் திறமை பெறாதவருமாகவும் இருக்கலாம். ஆனால், ஈடுபாட்டோடு கூடிய இதயபாவத்துடன் பாடலைப் 5 யுத்த இராவணல்சோகம்- 86.