பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

愛6 கவிதை பயிற்றும் முறை படிக்க முற்பட்டால், கட்டாயம் வெற்றிப் பாதையை அடைந்து விடலாம். இதில் சிறிதும் ஐயம் வேண்டாம்; தோல்வி நேரிடக் காரணமே இல்லை. ஆனால், உண்மையான ஈடுபாடு மட்டிலும் வேண்டும்; இதில் சிறிதும் தயக்கம் கூடாது. 'ஜயமுண்டு பய மில்லை மனமே 'என்று எ ன் ணி ச் செயலில் இறங்கவேண்டும். கவிதை கற்பித்தலில் வெற்றி காண வேண்டுமானால், "பாடலை பன்முறை படிக்க; மீண்டும் மீண்டும் படிக்க; மாணாக்கர்கள் விரும்பும் வரையில் படிக்க; உங்கள் உள்ளம் மெய்மறந்து கவிதை யில் தோயும் வரையில் படிக்க’ என்பதையே மறைமொழியாகக் கொள்ளவேண்டும். இசையும் பொருள் விளக்கமும்: தமிழ்க் கவிதைகளைச் சிறிது இசையோடு வாய்விட்டுப் படித்தால்தான் அவற்றின் சொல்லும் பொருளும் சுவையும் நன்கு தோன்றி உள்ளத்திற்கு உவகை அளிக்கும். இசையில் ஈடுபடாதவர்கள் எவரும் இல்லை. பகுத் தறிவில்லாக் குழந்தைகளும், கொடிய விலங்குகளும் இசையில் ஈடுபடுகின்றன என்பதை இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகின் றோம். தொழிலாளர் தம் தொழில் வருத்தம் தோன்றா திருத்தாற் பொருட்டுப் பாட்டுகள் பா டி அவற்றின் இசை இனிமையில் ஈடு பட்டுத் தொழில் செய்து முடிப்பதை இன்றும் காணலாம். நாட்டுப் புறங்களில் பொழுது புலர்வதற்குப் பல நாழிகைக்கு முன்னதாகவே எமுந்து கபிலை ஏற்றங்களில் நீர் இறைக்கும் உழவர்கள் ஏற்றப் பாட்டுகள் பாடுவது இன்றும் வழக்கிலிருந்து வருகின்றது. ஏற்றப் பாட்டிற்கு எதிர்ப் ப்ாட்டில்லை’ என்ற பழமொழியையும் காண்க. எனவே, கவிதைகளைப் படிக்கும் ஆசிரியர்கள் இசையுடன் அவற்றைப் படித்தால், புறத்தே சென்றுலவும் மாணாக்கர் மனத்தைச் செய்யுட் பாடத்தில் ஈர்ப்பதுடன், கவிதைச் சுவையிலும் திளைப்பதற்கு வழிகோலவும் கூ டு ம் . இசையென்றால் கேள்விக்கு இனிமையாக இருக்குமாறு அதற்குரிய ஓசையில் கவிதையைப் படிப்பதேயாகும். தமிழ்ப்பாக்களை எந்தெந்தப் பண்களில் எவ்வாறு பாடுவது என்பதற்குக் கீழ்கண்ட குறிப்புகள் ஓரளவு துணை செய்யலாம். į jff பண் வெண்பா சங்கராபரணம் அகவற்பா ஆரபி, தோடி கலிப்பா பந்துவராளி கலித்துறை பைரவி தாழிசை தோடி