பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் 等感 வியத்தால் தீட்டும் முறையை மாணாக்கர்கள் நன்கு உணர வேண்டும். பாடல்கள் சித்திரிக்கும் சூழ்நிலையை மாணாக்கர் களிடமிருந்தே வருவித்தல் வேண்டும். அப்பொழுதான் ஆசிரியர் பாடல்களைப் பன்முறைப் படித்ததன் பயனும் மாணாக்கர்கள் அவற்றை எந்த அ ைவுக்குச் சுவைத்துப் பொருளுணர்ந்தனர் என்பதும் தெரியவரும். மாணாக்கர்களின் ஒத்துழைப்பைக் கொண்டே கவிஞன் சித்திரிக்கும் சூழ்நிலையைத் 'திரும்பப் படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதில் மாணாக்கர்களைத் தேர்வாளர்கள் வினவி அவர்களது அறிவினைச் சோதிப்பது போல் செய்தலாகாது; அவர்களது மறுமொழியில் குறைகளிருப் பின் அவற்றைக் களைவதிலும் கருத்தைச் செலுத்தலாகாது. மாணாக்கர்கள் பாடல்களிலிருந்தே அவை காட்டும் சூழ்நிலை யைப் பெற்றனர் என்பதையும், இச்சூழ்நிலை பாடம் முழுவதி லும் ஊடுருவிச் செல்லவேண்டும் என்பதையும் நினைவிலிருத்த வேண்டும். இதற்குமேல் அதிகமாக இதனை வலியுறுத்தவும் முடியாது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல், கற்பித்தலின் நோக்கத்தை நாம் மறத்தலாகாது. ஆசிரியரின் குரல், கூறும் முறை, பிற கூறுகள் யாவும் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதல் வேண்டும். மாணாக்கர்களைக் கடிவதோ, உரத்துப் பேசி அச் சுறுத்துவதோ, திருத்துவதோ, பரிகசிப்பதோ கூடாது. இம்முறை களினால் பாடச் சூழ்நிலை கெடுமேயன்றி வேறு பயன் விளை யாது! அதற்கு மாறாக, பரிவுடனும் அன்புடன் அவர்களை ஒத் துழைக்கச் செய்தால், வில்லி படைத்த சூழ்நிலையைத் திரும்ப வும் வகுப்பறையில் ஒரளவு படைத்து விடலாம். முதற் பாடல்: பாடல்களில் குறிப்பிடப்பெறும் இரு முனிவர் கள் யாவர்? சஞ்சயன், உலு கன். கவிஞன் அவர்களை எல் வெச் சொற்றொடர்களால் குறிப்பிடுகின்றான்? சஞ்சயனை செஞ்சொல் முனி என்று: உலு கனை அஞ்சொல் முனி புரோகி தன் என்று.” அவர்களை யார் யாரிடம் எதற்காக அனுப் பினர்? முன் பேசியபடி நாட்டில் பாதியைத் தரும்படி கேட்டு வருமாறு பாண்டவர்கள் உலூகனைத் துரியோதனிடம் அனுப் பினர். பாண்டவர்களிடம் சென்று அவர்களுக்குத் துறவற நெறியைக் கூறி மீண்டும் கானிற்கு ஏகும்படிச் சொல்லி வரு மாறு திருதராட்டிரன் சஞ்சயனைப் பாண்டவர்களிடம் அனுப் பினான். யாம் உரைத்த கருமமும்’-என்ற தொடரில் யாம்' என்பது யாரைக் குறிக்கின்றது? கருமம்' என்ன? "யாம்' என்பது தருமனையும் கண்ணனையும் வீமனையும் குறிக்கின்றது. பகைவர்களை விண்ணாட்டிற்கனுப்பிய பிறகு துறவறத்தில் நாட்டம் செலுத்துவதுதான் மன்னர்களின் அறம் என்பது தரு