பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 È கவிதை பயிற்றும் முறை கனும் அத்தினபுரம் வருகின்றான். வந்த காரியத்தைக் கூறு கின்றான். துரோணன், வீடுமன் முதலிய பெரியோர்கள் சொல்லியும் கேளாது கர்ணன் முதலிய சிற்றினத்தவர்களின் கருத்தை முக்கியமாகக் கொண்டு சிறிது இராச்சியம்கூடத் தர முடியாது என்று மறுத்து விடுகினறான் துரியோதனன். இந்த இராச்சியம் எங்களுடையது; இதுகாறும் வசித்துவந்தகாட்டிற்குப் பாண்டவர்கள் திரும்பவும் போக வேண்டியதுதான்' என்று சொல்லிவிடுகின்றான். உலூகனும் அச்செய்தியைப் பாண்டவர் களிடம் தெரிவித்து விடுகின்றான். பிறகு திருதராட்டிரன் வேண்டு கோளின்படி சஞ்சயன் என்பான் பாண்டவர்களிடம் தூது வரு கின்றான். அவர்களிடம் துறவற நெறி கூறி மீண்டும் கானிற் கேகும்படி சொல்லுகின்றான். அதைச் செவிமடுத்த தருமன் "தாங்கள் சொல்லிய தருமம் துறவியருக்கே உரியது. மன்னர் அரச தருமத்தைவிட்டுத் துறவற நெறியை விரும்பார்; அவர்கள் பகைவர்களை விசும்பிலேற்றிய பிறகுதான் துறவறத்தில் நாட்டம் செலுத்துவர் என்று கன்ன்று கூறுகின்றான். வீமனும் சஞ்சயனை நோக்கி, நீ கூறும் தவம் எங்கட்கு உகந்த தன்று; துரியோதனாதியராம் நூறு பசுக்களைக் கொன்று இராசசூய யாகம் வேட்ட தருமனைப் போர்க்கள வேள்வியை யும் புரிவிப்பதே எம்மனோர் கடன்' என்று வெஞ்சினம் மூளச் சாற்றுகின்றான். கண்ணனும், பாண்டவர்கள் நிலவுலகை ஆளு தலும் துரியோதனாதியர் வீரசுவர்க்கம் ஏறுதலும் செய்யக் கூடிய தவமே என்று கூறுகின்றான். நிகழ்ந்தவற்றை அப் படியே சஞ்சயன் திருதராட்டிரனிடம் உரைக்கின்றான். பாண்டவர் கள் மீண்டும் கண்ணனைத் தூதுபோக்க எண்ணுகின்றனர். இந் நிலையில் தருமன் கண்ணபிரானை நோக்கி இவ்வாறு பேசு கின்றான்’’. இதன் பிறகு கவிதைகளை இசையூட்டி மாணாக்கர்கள் மன நிறைவு கொள்ளும்வரை நன்றாகப் படித்தாகி விட்டது என்று கொள்வோம். படிக்கும்பொழுதே பாடல்களில் வரும் சொற் றொடர்களையும் சொற்களையும் விளக்கிக்கொண்டே (அல்லது கரும்பலகையில் எழுதிக்கொண்டே) போதல் வேண்டும். கவிதையின் சூழ்நிலையை உண்டாக்கல்: இதற்குமேல் நாம் செய்ய வேண்டுவதென்ன? பாடல்களின் உயிர்நிலைக் கருத்திற் குப் போகவேண்டும். இனி, தாம் செய்யவேண்டியவற்றைக் கூறுமாறு கண்ணனைத் தருமன் வேண்டுவதும், அதற்குப் கண்ணன் கூறும் மறுமொழியுமே பாடல்களின் உயிர்நிலைக் பொருள். இந்தச் சூழ்நிலையைக் கவிஞன்தான் தன் சொல்லோ