பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் 莎夏 2. செய்வரால் இனமுகளுந் திருநாடு பெறநினைவோ? சென்று மீளப் பைவராய் அருங்கானில் பயின்று திரி தரநினைவோ? பகைத்த போரில் உய்வரார்? எனவிரைவின் உருத்தெழுத்து பொரநினைவோ? உண்மை யாக ஐவராம் அவனிபர்க்கும் நினைவேதென் (று) அருள்புரிந்தான் அமரர் கோமான். 3. “வயிரமெனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்கா டென்னச் செயிரமரில் வெகுளிபொரச் சேர இரு திறத்தேமுஞ் சென்று மாள்வேம்: கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில் கலந்து வாழ, உயிரனையாய் சந்துபட உரைத்தருள்” என் றான்.அறத்தின் உருவம் போல்வான். 4. "அரவுயர்த்தோன் உடன்மறுகு தாடிநீர் வென்றஅந்நாள் அவன்றான் சொன்ன விரதமொழி தவிராமல் வெங்கானம் போய்மீண்டீர்; வெய்யோன் உங்கள் குருநிலத்திற் பாதியினிக் கொடாதிருந்தால் ஆங்கவனைக் கொன்று போரில் இருநிலத்தை ஆளஇனித் துணிவதே கடன்’ என்றான் எம்பி ரானே. இந்த நான்கு பாடல்களும் வில்லி பாரதத்தில் கிருட்டினன் தூதுச் சருக்கத்தில் உள்ளவை. இவை நான்காம் படிவ மாணாக் கர்கட்குப் பாடப் பகுதியாக வந்துள்ளன. விறுவிறுப்பான எளிய இனிய நடையில் கதைச்சுருக்கம் கூறிப் பாடல்களின் இடம் சுட்டி மாணாக்கர்களின் மனத்தை ஆயத்தம் செய்து கவிதைகளைப் படிக்க ஆர்வம் ஊட்டுதல் வேண்டும். இதனை இப்பாடத்தின் முகவுரையாகக் கொள்ளலாம்: முகவுரை: பாண்டவர்களின் பன்னிரண்டு யாண்டு காடுறை வாழ்க்கையும் ஓராண்டு கரந்துறை வாழ்க்கையும் முடிவுறு கின்றன. கண்ணன் உலூகன் என்ற ஓர் அந்தணனைத் துரது போக்கிப் பாதி நாட்டைக் கொடுப்பதில் துரியோதனின் கருத்தை அறிந்து வருமாறு ஏவுகின்றான். அங்ங்னமே, உலு