பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎莎 கவிதை பயிற்றும் முறை கூறி விளக்குவதால், மாணாக்கர் பாடல்களின் பொருளை நன்கு உள்ளத்தில் அமைப்பர்; தேர்விலும் உயர்ந்த மதிப்பெண் கள் பெறுவர். ஆனால், பாடல்களின் பொருளை மட்டிலும் அறிதல் ஒருசார் நோக்கமேயாகும். சுவையான உயர்ந்த உணவைச் சுவைத்து மகிழாது அப்படியே விழுங்கி வயிற்றைநிரப் புவது போலாகும் இது. இதைவிடப் பாடல்களின் நயத்தையும் அழகையும் உணர்ந்து சுவைத்து மகிழ்தலே சிறந்த நோக்கமா கும்; முருகுணர்ச்சியில் திளைத்தலே முக்கிய நோக்கமாகும். கவிதைகளைக் கவிஞன் எந்த உணர்ச்சியில் பாடினானோ அவ் வுணர்ச்சி கவிதைகளைக் கற்போரிடத்தும் உண்டாதல் வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் கவிதை இன்பத்தில் திளைக்க முடி யும்.இதற்கு ஆசிரியர் என்னசெய்யவேண்டும்? கவிஞனின் உணர்ச் சியை முதலில் தாம் பெற்று, பிறகு மாணாக்கட்கு வழங்கவேண் டும். சொற்சுவையும் பொருட்சுவையும்,தொடைநயமும் அணிநயமும் இடத்திற்கேற்ற சந்த இனிமையும் கொண்டு விளங்கும் பாடல் களில் மாணாக்கர்களைத் திளைக்க வைத்தலே தமிழாசிரியர் களின் முதற்கடமையும் முதலாய கடமையுமாகும். கவிதை களின் கவினை, உணர்ச்சியை, அறியச் செய்யாது பாடல்களைப் பயிற்றுவதால் பயனொன்றும் இல்லை. தொடக்க நிலையில் கற்ற பாடல்களையே உயர்நிலையில் கற்பிக்க வேண்டிய முறை யில் கற்பித்தால் கட்டாயம் புதிய பொருள் துலங்கும்; மாணாக் கர்கள் சுவைப்பதிலும் குறைவு இராது. பாடத்தின் பொருள் நன்கு துலங்கிவிட்டால், மாணாக்கர்கள் தேர்வில் எந்த வினாக் கட்கும் விடையளிக்கும் திறனையும் பெற்று விடுவர். ஓர் எடுத்துக் காட்டு: 1959-ஆம் ஆண்டில் தமிழ்க் கவிதை களைக் கற்பிப்பதைப்பற்றி ஆராய்வதற்குக் கூட்டப் பெற்ற கருத்தரங்கொன்றிற்கு என்னால் எழுதப்பெற்ற கவி தைப்பாடம் ஒன்றினை ஈண்டுத் தருகின்றேன். 1. செஞ்சொல்முனி சஞ்சயனுக்கு யாமுரைத்த கருமமும்முன் சென்ற காலை அஞ்சொல்முனி புரோகிதனுக்(கு) அவனிசைத்த கருமமும்நீ அறிதி யன்றே நஞ்சுதனை மிகஅருந்தி நன்மருந்தும் மந்திரமும் விரைந்து நாடா(து) எஞ்சினர் தங்களைப்போல இருக்குமதோ யார்மனத்தும் இருக்கும் சோதீ! 2 இக்கருத்தரங்கு (Seminar) காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுப்பணித்துறை'யின் ஆதரவின் கீழ்க் கூட்டப்பெற்றது.