பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裔 கவிதை விளக்கம் 荔 சொற்றொடர் யாது? "ஐவராம் அவனிபர்”. செய்வரால்... பொர நினைவோ?’ என்றவற்றின் சொல்நயத்தை ஆசிரியர் எடுத்துக்காட்டி மாணாக்கர்களைச் சுவைக்கச் செய்யலாம். மூன்றாம் பாடல்: கண்ணன் வினவியதற்குத் தருமன் உரைத்த மாற்றம் என்ன? "போரில் இருவேமும் அழிவேம். நீ சென்று இருதிறத்தாரும் கலந்துவாழச் சமாதானம் செய்க’ என்று வேண்டினான்.’’ இருதிறத்தாருக்கும் நடக்கக்கூடிய போரைக் கவிஞன் எந்த உவமையால் விளக்குகின்றான்? 'நெரு பினால் அழியும் மூங்கிற் காடு போல்’ என்று விளக்குகின்றான்.' அந்த உவமையைக் கவியின் தொடராலேயே கூறுக. வயிர மெனும் கடுநெருப்பை மிக மூட்டி வளர்க்கின் உயர் வரைக் காடென்ன. இச்சொற்றொடரில் வயிரமெனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்’ என்பதில் உருவக அணியும், வரைக்கா டென்ன என்பதில் உவம அணியும் வந்துள்ளதை எடுத்துக்காட்டலாம்.உருவக அணிக்கும் உவமை அணிக்கும் உள்ள வேற்றுமையை விளக்கிக் காட்டுவதற்கு இதனை ஒரு நல்ல வாய்ப் பாகப் பயன்படுத்தலாம். ஆசிரியர் கயிரவமும் தாமரையும் கமழ் பழனக் குருநாட்டிற் கலந்துவாழ’ என்ற சொற்றொடரி லுள்ள குறிப்புப் பொருளை நன்கு விளக்கவேண்டும். கயிரவம்’ கெளரவர்களையும் தாமரை பாண்டவர்களையும் குறிக்கின் றன என்பதை எடுத்துக்காட்டவேண்டும். பகலில் கதிரவனைத் கண்டு மலரும் தாமரையும், இரவில் மதியினைக் கண்டு மலரும் ஆம்பலும் உயிரற்ற பொருள்கள்; ஒன்றற்கொன்று மாறுபாடான தன்மைகளையுடையவை. இவை ஒற்றுமைப்பட்டுக் கழனிகளில் வாழ்கின்ற பொழுது பகுத்தறிவுள்ள மனிதருள்ளும் சிறந்த அரச ரான யாம் கூடி வாழாதிருப்பது தகுதியோ?" என்று தருமன் குறிப்புப் பொருளால் குறிப்பிடுவதை மாணாக்கர்கள் உணர்ந்து இன்புறச் செய்ய வேண்டும், உயிரனையாய்! என்ற சொற் றொடரிலுள்ள நயம் என்ன? 'உடம்பினுள் உயிர் போல் உயிருக் குள் உயிராய்த் தங்குபவன். பரமான்மா சீவான்மாவினிடம் அந்தர் யாமியாய்த் தங்குதலால் இவ்வாறு கூறினான் கவிஞன்." இதனை மாணாக்கர்கள் அறிவது குதிரைக் கொம்பு; ஆசிரியர்தான் எடுத் துக்காட்டி விளக்கவேண்டும். தருமனைக் குறிக்கும் சொற்றொடர் யாது? 'அறத்தின் உருவம் போல்வான்.' தருமனைக் கவிஞன், நூல்கள் நுவலும் அறங்கள் எல்லாம் நிறைந்தவன் என்று குறிப் பிடுவதை விளக்க வேண்டும். நான்காம் பாடல்: "அரவுயர்த்தோனுடன் மறு சூதாடி - மறு சூதாடியதன் காரணம் என்ன? "முதலில் ஆடிய சூதாட்டங்களி