பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கவிதை பயிற்றும் முறை லெல்லாம் தாங்கள் அனைவரும் தோற்றதோடன்றி, துரி யோதனுக்கு அடிமைகளாகவும் ஆயினர். இந்த அடிமைத்தனம் நீங்குவதற்குப் பாண்டவர்கள் திரெளபதியின் சொற்படி மறு படியும் சூதாடி அடிமைத் தனத்தை ஒழித்தனர்.” “அவன்தான் சொன்ன விரத மொழி - அவன் யாரைக் குறிக்கின்றது? கூறிய விரதமொழி என்பது என்ன? அவன் என்றது. துரியோ தனனை. விரதம்' - என்பது இன்ன அறம் செய்வேனென்றும், இன்னபாவம் ஒழிவேன் என்றும் தம் ஆற்றலுக்கேற்ப வரைந்து கொள்வது. இங்குப் பன்னிரண்டு யாண்டுகள் காடுறை வாழ் வும் ஒராண்டு கரந்துறை வாழ்வும் செய்து தீர்வோம் என்று தருமன் உறுதிப்பாடு செய்து கொள்வதற்குத் துரியோதனன் சொல்லும் சொல் விரதமொழி எனப்பட்டது. எம்பிரான் இரு நிலத்தை ஆள்வதற்குக் கூறும் யோசனை என்ன? பேசிய படி துரியோதனன் நாட்டில் பாதி கொடாவிடில், அவனைப் போரில் கொன்று இரு பகுதிகளையும் நீங்களே ஆள்வது தகுதி என்று கண்ணன் யோசனை கூறினான்’’. இவ்வாறு மாணாக்கர்களுடன் ஒத்துழைத்துக் காட்சிகளை வகுப்பறையில் நல்ல முறையில் சித்திரித்த பிறகு, பாடல்களை மீட்டும் ஒரு முறை இசையுடன் பாடி மாணாக்கர்களைச் சுவை யின் உச்ச நிலைக்குக் கொண்டுசெலுத்த வேண்டும். இஃது ஒரு முறையேயன்றி, இதுதான் முடிவான முறையென்று சொல்ல முடியாது. மாணாக்கரின் வயது, அவர்கள் வாழும் சூழ்நிலை (நகர்ப்புறம், நாட்டுப்புறம்), அறிவுநிலை ஆகியவற்றையொட்டி இம்முறையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இன்னோர் எடுத்துகாட்டு: இன்னோர் எடுத்துக்காட் டினைத் தருவோம். யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே: வாழ்தல் இனிதென மகிழ்தன்றும் இலமே! முனிவின் இன்னா தென்றலும் இலமே; மின்னொடு வானந் தண்டுளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியிற் றெளிந்தனம்; ஆகலின் மாட்சியிற்