பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் 57 பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. - புறம் - 192 (கணியன் பூங்குன்றனார்) பண்டைத் தமிழ்ச் சான்றோர் ஒருவரின் பரந்த உள்ளத் தைக் காட்டும் பாட்டு இது. பாட்டின் கருத்துகளை உணர்தல் கடினம். கற்று உணர்ந்து அடங்கிய சான்றோர்களும் மேற் கொள்வதற்கு அரியனவாகவுள்ள சில கருத்துகள் இப்பாடலில் மிளிர்கின்றன. இதைத் தனிப்பட்ட பிரத்தியேகமான முறை யினால்தான் கற்பித்தல் வேண்டும். இத்தகைய பாடல்கட்கு விளக்கமான முகவுரை ஒன்றிருத் தல் வேண்டும். அவ்வித விளக்கம் பெற்றால்தான் ஆசிரியர் பாடலை இசையுடன் படிக்கும்பொழுது மாணாக்கர் அதன் கருத்தை ஓரளவு உளங்கொள்ள முடியும். இப்பாட்டிற்கு இதனை விளக்கந் தரும் முகவுரையாகக் கொள்ளலாம். முகவுரை 'பாடலைப் பாடிய கணியன் பூங்குன்றனார் வாழ் விலும் தாழ்விலும் தளராத மனத்தினையுடையவர்; இன்பத்தை யும் துன்பத்தையும் ஒரே மாதிரியாகக் காணும் மன அமைதி யுடையவர். நன்மை செய்ததற்காக ஒருவரைப் பாராட்டவும் செய்யார்: தீமை செய்தார் என ஒருவரை இகழவும் மாட்டார். இவ்வாறே பெரியோர் என்று ஒருவரைப் போற்றிப் புகழவும் மாட்டார்; சிறியோரென்று ஒருவரைப் புறக்கணிக்கவும் மாட் டார். ஊழ்வலியில் பெரு நம்பிக்கை கொண்டவர். மண்ணிடைப் பிறந்த உயிர்கள் யாவும் தாம் தாம் செய்த வினைக்கேற்றவாறு இன்பமும் துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமை யும் எய்தும் என்பதை நூல்களாலும் அதுபவத்தாலும் துணுகி யறிந்தவர். இத்தகைய உயர்ந்ததொரு பண்பினால் முடியுடை வேந்தர்களையும் புகழ்ந்து பாடவில்லை; குறுநில மன்னர்கனை யும் வியந்து போற்றவில்லை. வள்ளல்களையும் மகிழ்ந்து பாராட்டவில்லை. இதனைக் கண்ட அக்காலச் சான்றேர்களுள் சிலர் அவரிடம் சென்று ஒருவரையும் அவர் பாடாததற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று வினவினர். அதற்கு அவர் கூறிய விடையே மேற்கூறிய பாட்டாக வடிவெடுத்தது.” கவிதையின் சூழ்நிலையை உண்டாக்குதல்: ஆசிரியர் பாடலை முதலில் இன்னோசையுடன் சொற்களைப் பிரிக்காமலேயே சீர் 8. ஆரபி, தேடி - ஆகிய இரண்டினுள்ளும் ஏதாவதொரு இராகம் பொருந்தும், க-8