பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi லுள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றுகிறான். அதை வானத்திலே கொண்டுபோய்ச் சேமித்து வைத்துப் பக்குவக் காலம் வந்தால் மழையாகக் கொட்டுகின்றான். இந்த அரிய சக்தியையும் கருணையையும் உணர்ந்து வியந்த நம் முன் னோர்கள் சிவபெருமான் தன் தலைமேலே கங்கையையே குடமாக வைத்து இருக்கிறான் என்று கற்பனை செய்திருக் கிறார்கள். அப்புTஆர் சடையப்பா!' (அப்பு-நீர்) என்று அவனைப் பாராட்டியிருக்கிறார்கள். தம்மைமே அவனிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஞானிகளுடைய உள்ளத்திலேயே அவன் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றான். அதே சமயத்தில் இத்தகைய ஞானம் இல்லாதவர்களால் அறியப் படாதவனாயும் அண்ட மும் கடத்து அகண்டமும் கடந்து எங்கேயோ தூரத்தொலை வில் உள்ள பேர்வழியாகவும் இருக்கிறான் என்கிறார் டி.கே.சி.”* இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ச்ோஃபிய வாடியா மணிவாசகரது மேற்காட்டிய பாடலைப் பல தடவை டி.கே.சி-யைப் பாடும்படிக் கேட்டு அநுபவித்து விட்டு இறுதியில் "தமிழ் மொழியில் ஒர் அபூர்வ மந்திர ஆற்றல் இருக்கிறது. பாட்டின் ஒலியைக் கேட்கும் போதே ஒர் ஆனந்த மயக்கம் ஏற் படுகிறது' என்கிறார். இப்படி மொழி அறியாதவர்களையும் 'கவிதை அநுபவம் பெறச் செய்து விடுகின்றார் டி.கே.சி. டி.கே.சி. கையாண்டமுறை தமிழ்க் கவிதை பயிற்றும் ஆசிரியர் கட்கு ஒரு வழிகாட்டி முறையாக அமைதல் வேண்டும். சில ஆண்டுகட்டு முன்னர் யான் ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூருக்கு ஒர் அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். அது ஜூன் மாதம். ஆந்திர நண்பர் ஒரு பழ விருந்து அளித்தார். விருந்து சாமானியமானதே. இரண்டு வெள்ளித் தட்டுகளில் தட்டுக் கொன்றாக இரண்டு மாங்கனிகளை வேலைக்காரன் ஒருவன் எங்கள் முன்னிருத்த மேசையின்மீது கொண்டு வந்து வைத்தான். நண்பர் பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதைத் தடவிக் கொண்டே நெருடினார். என்னை நோக்கி தினண்டி’ (தின்னுங்கள்) என்றார். தான் கத்தி ஒன்று வரும் என்று எதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நண்பர் பழத்தின் அடிப்புறத்திலிருந்து காம்பை நீக்கித் தொளையிட்டுப் பழத்தை 8 தகவல் : (அமரர் திரு. தொ. மு. பால்கரத் தொண்டைய ன் ரசிகமணி ,يي ئ 8gع 8ه p Er ته rه *R ، په ث ه ي؛