பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii அப்படியே உறிஞ்சிக் குடித்தார். பழரசத்தைப் பருகின விதம் என்னை வியக்க வைத்தது. பின்னர் எங்கள் முன் இருக்கும் பழம் ரசவருக்கத்தைச் சேர்ந்தது என்றும், இந்த வகைப் பழத்தை இப்படித்தான் உண்ண வேண்டும் என்றும் விளக் கினார். பின்னர் நானும் அவ்விதமே பழத்தை நெருடி அதன் சாற்றை அவர் பருகின முறையிலேயே உறிஞ்சிப் பருகினேன். அற்புதமான 'பழ அநுபவம் பெற்ற்ேன். அப்போது டி.கே.சி. யின் நினைவுதான் வந்தது. டி.கே.சி. ஒரு பாடலைப் பலமுறை படித்து-இல்லை, பாடி-இறுதியில் மிகக் கம்பிரமாகப் பாடி கேட்போரைக் கவிதை அநுபவத்தின் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதை நினைத்துக் கொண்டேன். மாம்பழச்சாறும் டி.கே.சி. தரும் கவிதை ரசமும் ஒன்றுபோல் இருந்து இன்றும் என்னை மனத்தால் சுவைக்க வைக்கின்றது. கவிதை பயிற்றலில் பல ஆசிரியர்கள் என் மனக்கண் முன் நிற்கின்றனர். முதலாவது நான் முசிறி உயர்நிலைப் பள்ளியில் (1933) ஐந்தாம் படிவத்தில் (பழைய பத்தாவது) படித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்க் கற்பித்தவர் திரு. ஜம்புலிங்கக் குருக்கள். அவர் கவிதை கற்பித்த முறை இன்றும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. அவர் எழுப்பிய உணர்க்கிதான் அடிப் படையில் என்னைத் தமிழ் வெறியனாகச் செய்தது. பின்னர் எவரும் கவிதையை அங்ங்னம் பயிற்றவில்லை. பின்னர் நான் சைதையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (1940-41) பயின்றபோது கல்வி உளவியலை இதே பாணியில் உளம் கவரும் முறையில் பயிற்றியவர் பேராசிரியர் குருசாமிரெட்டியார் அவர்கள். அவர் கற்பிப்பது ஓமியோபதி மாத்திரையை உண்பதுப்ோல் இருக்கும். அவர் பொழிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்களில் யான் ஒருவன்; பெரும் பயன் பெற்றேன். உளவியல் என் ஆன்மாவுடன் ஒன்றி விட்டது. அடுத்து, நான் ஆசிரியத் தொழிலில் இறங்கிய பிறகு (1941) (தலைமையாசிரியர், துறையூர் உயர்நிலைப் பள்ளி) அப்போது சேலம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு வீ. உலக ஊழியனாரின் கவிதைப்பற்றிய சொற்பொழிவு கள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. பலமுறை சொற்பொழிவுகட் கென வரவழைத்துத் துறையூரில்(1943) பொருநராற்றுப்படை” பாடங்கேட்டேன்.பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முழுதும் அவருக்கு மனப்பாடம். பொருநராற்றுப் படையில் பல அடிகளை இசை யுடன் பல முறைப் படித்து, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத் தும்போது துணிக் கடையில் நல்ல விற்பனையாளர் பல்வேறு