பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை விளக்கம் 59 முன்னரே அறிந்து சொல்ல இயலாது. இன்றைய அறிவியலும் அந்த அளவுக்கு வளரவில்லை. எப்படியோ மழைபெய்து ஆற்றில் வெள்ளம் வருகின்றது. அதுபோலவே, உலகில் நன்மைகளும் உள்ளன; தீமைகளும் உள்ளன. ஏன் உள்ளன? என்பதை நம் மால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஏதோ உள்ளன. அவ் வளவுதான். உயிர்கள் அவற்றைத் துய்ப்பதுதான் ஊழின் செயல் -"முறை வழிப்படுதல்," உயிர்கள் யாவும் ஆற்று நீரில் இயக்கப் பெறும் மிதவைகள் போலத்தான். எவ்வளவு கற்பனை? ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரல்வவா? அவர் ஊகித்து எதனை யும் சொல்ல முடியும்; கண்ணால் காணும் காட்சிகளால் ஆராய்ந்து சொல்ல முடியும், "திறவோர் காட்சியில் தெளிந்தனம்' என்றல்லவோ கூறுகின்றார்? இவ்விடத்தில் இவ்வாறு ஆசிரியர் விளக்கிக்கூறவும் நேரிடும். பாட்டு கடினமானது; பண்டைய நடையினது. "யாவரும் கேளிர்” என்பது கவிஞரின் கொள்கை என்பது எவ்வாறு அறியப் பெறுகின்றது? பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற அடிகளால் இது தெளிவாகின்றது.’ இவ்வாறு இப் பாடலை விளக்கியபிறகு மாணாக்கர்களைக் கொண்டே கருத்து களைத் தொகுத்துக் கூறச் செய்யலாம். இறுதியாக ஒரு முறை ஆசிரியர் பாடலைப் பெருமிதத்துடன் இசையூட்டிப் படித் தால் மாணாக்கர்கள் கவிஞரின் இதயத்தையே தொட்டுப் பார்த்து விடுவர். இத்தகைய உயர்ந்த பாடல்கள் மாணாக்கர் களின் வயதுநிலை, அறிவு நிலை, அநுபவநிலை ஆகியவற்றிற் கேற்றவாறு விளக்கம் அடையும். அதனால்தான் இத்தகைய பாடல்களை ஐந்தாம் படிவப் பாட நூல்களிலும் காண்கின் றோம்; எம்.ஏ. வகுப்புப் பாடத்திட்டத்திலும் பார்க்கின்றோம்.' நினைவிவிருத்த வேண்டியவை : இன்னும் பல எடுத்துக் காட்டுகளைத் தரலாம். இவ்விரண்டே நமக்குப் போது மானவை. இவற்றிலிருந்து நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றைத் தொகுத்துக் கூறுவோம். (1) பாடல்களைப்பற்றி மாணாக்கர்கள் மனத்தில் ஒரு விதக் கருத்து வளர்வதற்கு வாய்ப்புகள் தருதல் வேண்டும். பாடத்தின் தொடக்கத்தில் நாமே பாடலைப் படிக்கின்றோம். 4. சுப்புரெட்டியார், ந: தமிழ் பயிற்றும் முறை, பக்கம் 854-858