பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கவிதை பயிற்றும் முறை முதல் தடவை படிக்கும்பொழுது ஏதோ ஒரு கருத்து அவர்கள் மனத்தில் தோன்றத் தொடங்கும். இரண்டாவது முறை பாட லைப் படிக்கும்பொழுது அக்கருத்து ஒரு திட்டமான உருவத் தைப் பெறுகின்றது. நாம் மாணாக்கர்கட்கு அவர்கள் கற்பனை விழித்த நிலையில் பாடல்களைக் கவனத்துடன் கேட்குமாறு பயிற்சி கொடுத்திருந்தால், இஃது எளிதாக அமைதல் கூடும். நன்கு பயிற்சி பெற்றவர்கள் கவிதையை முதல் தடவை படிக்கும் பொழுதே மிக வியத்தகு முறையில் இக்கருத்தினைப் பெற்று விடுகின்றனர். (2) கவிதையைக் கற்பித்தல் என்றால் அதனைக் கண்ணழி துச் சித்திரவதை செய்வது அன்று; அழகான பொருளைச் சிதைத்துத் துய்ப்பது போலவும் அன்று. அங்ங்ணம் சிதைத்து விவரங்களைக் காண்பதால் அழகையும் பொருளையும் இழக்க வேண்டியே நேரிடும். ஆனால், அந்த விவரங்களின்மூலம் கவிதை யின் முழுமையிலேயே அந்த அழகினைக் காண முயன்றால், அந்த அழகு நம் அறிவுக்குத் தென்படும். (3) நாம் கவிதையைப் படிப்பதனால் மாணாக்கர்கள் பெறும் மகிழ்ச்சியின் உச்சநிலையை, கவிதையை மீண்டும் நாம் கற்பிப்பதனால்-விளக்குவதனால்-அதற்கு எதிரான நிலையை உண்டாக்கி விடுதல் ஆகாது. பாடத்தின் இறுதியில் கவிதையை நல்ல முறையில் படிப்பதனால், கவிதையின் முருகுணர்ச்சியை மாணாக்கர்கள் நன்கு அதுபவிப்பர். (4) இதற்கு முன்னர், மாணாக்கர்கள் கீழ்வகுப்புகளில் பாடத்தில் வந்த இதே கவிதையைப் படித்திருந்தால், அதை மீட்டும் ஒரு முறை ஆசிரியர் கற்பிக்கக் கூடாது என்பதில்லை. முன்னரே அறிந்தவற்றின் அடிப்படையில் மேலும் விளக்கந் தந்தால், இப்பொழுது வளர்ந்த நிலைக்கேற்ப அதனை நன்கு அநுபவிப்பர். வாழ்க்கையில் அதிகமாகப் பெற்றுள்ள அநுபவ மும்,ஆழ்ந்த உள்ளுணர்வும் கவிதையின் முருகுணர்ச்சியை நன்கு பெறுவதற்குத் துணை செய்யும். மாணாக்கர்கள் தாமாகவே கவிதைகளை வாய்விட்டுப் படிப் பது எப்பொழுது? என்ற வினா எழலாம். அதற்கு இதுதான் தக்கநிலை. இப்பொழுது கவிதை அவர்களுக்கு ந ன் கு தெரியும்; கிட்டத்தட்ட மனப்பாடம் செய்த நிலையில் கவிதையை அவர்கள் நன்கு அறிவர். அவர்கள் இப்பொழுது தம்முடைய குரலால் அக் கவிதையைப் படிக்கும் நிலையில் இருப்பதாகக் கருதலாம். படிப்