பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிதை பயிற்றும் முறை களையும், பிறவற்றையுமே அதிகம் கற்கின்றனர்; வேண்டாதன வற்றைக் கற்பதில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். புதிய செகண்டரிக் கல்வித் திட்டப்படி முதல் மூன்று யாண்டுகளை நீக்கிவிட்டால் குறைந்தது எட்டு யாண்டுகள் மாணாக்கர்கள் கவிதைப் பாடங்களைப் பயிலுகின்றனர். இந்தக் காலத்தில் அவர்கள் சிறுகாப்பியங்கள், பெருங்காப்பியங்கள், தனிப்பாடல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், சில்லறைப் பிரபந்தங்கள்.சீட்டுக் கவி போன்றவைகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கற்க லாம். தாமே, தாம் சுவைத்த கவிதைகளைத் திரட்டத்தொடங் கினால், எத்தகைய அழகான கவிதைக் கருவூலத்தைத் தொகுத்து வைக்க முடியும்! கவிதையைப் படித்துச் சுவைப்பது எத்தகைய இன்பத்தை நல்கவல்லது என்பதையும், அங்ங்னம் சுவைக்கும் பொழுது கவிதையில் அழகை அநுபவிப்பதுடன் உண்மையை யும் எந்த அளவுக்கு உணர முடிகின்றது என்பதையும் ஒரளவு நன்கு அறிகின்றோம், இன்று பெரும்பாலான உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி மாணாக்கர்கள்-குறிப்பாக, பள்ளியிறுதித் தேர்வு வகுப்புகளில் படிப்போர்-தமக்குப் பாடமாக வந்துள்ள கவிதைகளைப் படிக்காமல் உரை நூல்களையும் வினா-விடை நூல்களையுமே அதிக நேரம் கட்டி அழுகின்றனர்” என்பது கண் கூடு. பாடநூலை வாங்குவதற்குமுன் உரைநூல்களையே வாங்கு கின்றனர். அவற்றில்தான் தம்முடைய முதல் நாட்டத்தைச் செலுத்துகின்றனர். மேற்கூறியவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமானதொன்று யாதெனில், மாணாக்கர்கள் தம் கற் பனையைப் பறக்கவிட்டுக் கவிதைகளைக் கேட்பதில் நல்ல பயிற்சியடைய வேண்டும் என்பது. ஒரு முறை படித்தவுடன் மாணாக்கர்கள் எவ்வளவு பலன் அடைந்துள்ளனர் என்பதைக் காண்பதற்குப் பல முறைகள் உள்ளன. கவிதைப் பாடங்களில் தேர்வு உள்ளது என்பதை மாணாக்கர்கள் உணராவிட்டால் அவர்கள் அவற்றில் போதுமான அளவு கவனம் செலுத்தார் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். இந்நூலாசிரியரைபொறுத்த மட்டிலும் அங்ங்ணம் கருதுவது தவறு. தேர்வுபற்றிய எண்ணம் மாணாக்கர்களிடம் இருந்தால், அவர்கள் சரியானமுறையில் கவி தையைக் கவனித்துக்கேட்கார்.தேர்வுக்காகப் படிக்கும் மாணாக் கர்களைக் கவனித்தால் இவ்வுண்மை தெளிவாகப் புலனாகும், கவிதையைச் சுவைக்கும் பழக்கமே-கவிதை அநுபவமே-அவர் களிடம் அமைவதில்லை. ஒரோவழி அமையினும் அது நிலைபெறு வதில்லை; இத்தகைய நிலை பள்ளியில் நிலவச் செய்வது கவிதை பயிற்றுவதன் முதலாய பயனை மறப்பதாகும். குழந்தையோ