பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் על மாணாக்கனோ கவிதையை நன்கு 'அநுபவிக்க வேண்டுமாயின், அவன் கவலையற்ற மனத்துடன் அதனைப் படிப்பதைக் கேட்கவேண்டும். நம்முடைய திறனாயும் அறிவு உறங்கிய நிலை யில்தான் மனம் கற்பனையுடன் கவிதையதுபவத்தைப் பெறு வதற்கு ஆயத்தமாக இருக்கும்; சுவைப்பதற்கேற்ற சூழ்நிலையும் அமையும். விடுதலையுடன் உள்ள மனந்தான் அதிகமாக ஏற்கும் தன்மையுன டயது. மனம் கவிதையை நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு விட்டால் சிறுவர்கள் நன்முறையில் திறனாயும் ஆற்றலையும் பெறுவர். சில ஆசிரியர்கள் இவ்வுண்மையைச் சரி யாகப் புரிந்துகொள்வதே இல்லை, ஒன்று மற்றொன்றினை வளர்ப்பதற்குத் துணை செய்கின்றது என்பதை அவர்கள் சரி யாக உணர்வதே இல்லை. விளையாட்டு முறை: இவ்விடத்தில் கற்றலில் விளையாட்டு முறை எந்த அளவு துணைசெய்கின்றது என்பதை நினைவுகூர்தல் வேண்டும். சிறுவர்கள் மகிழ்ச்சி தரும் பொருள்களில்தான் அதிக மாகக் கவனம் செலுத்துவார்கள். பல்வேறு விளையாட்டுகள் பொழுதுபோக்குச் செயல்கள், விருப்பச் செயல்கள் (Hobbies) போன்றவற்றில் அவர்கள் முழுமனத்துடன் ஈடுபடுவதிலிருந்து இதனை நன்கு உணரலாம். வளர்ந்தவர்கட்கும் கிட்டதட்ட இதே நிலைதான். எதையும் விளையாட்டாகப் பாவிக்கும் மன நிலை பெற்றுவிட்டால், அனைத்தும் மகிழ்ச்சியை அளிக்கும். இந்த மனநிலையைப் பெற்ற கவிஞன்தான் உலகில் நடைபெறும் செயல்களைத்தையும் ஆண்டவன் அலகிலா விளையாட்டாகச்? செய்துவருகின்றான் என்ற கருத்தினையும் நமக்குத் தருகின்றான், கவிதையை அநுபவிப்பதிலும் இம்மனநிலை மாணாக்கர்கட்கு ஏற்படுதல் வேண்டும்; ஆசிரியர் அதற்கேற்ற பயிற்சி தரவேண் டும். வகுப்பறையோ பள்ளியோ இன்பம் தரும் களமாக ஆகிவிட் டால் அதில் பெருங்கேடு விளைதல் கூடும் என்றும், பள்ளி வேலைக்காக ஏற்பட்டதேயன்றி விளையாட்டுக்காக அன்று என்றும் அவர்கள் கருதுவர், பள்ளி வேலைக்காக-மாணக்கர் கள் பயில்வதற்காக ஏற்பட்டது என்பது உண்மைதான்; அதை அவர்மறுக்கவில்லை. எனினும், ஒரு மாணாக்கனிடமிருந்து நல்ல நிலையை எதிர்ப்பார்த்தால், அதில் அவன் மகிழ்ச்சியுடன் ஈடு படக்கூடும். உளவியல் அறிஞாகள் கூறும் விளையாட்டுபற்றிய கருத்துக்களை உணர்ந்தால்தான் இதற்குத் தெளிவு பிறக்கும். எவ்விதக் கட்டாயமின்றி விளையாட்டாக ஏற்றுச் செய்தால் தான் அனைத்தும் திறனுடன் நடைபெறும். மனிதனுடைய அருஞ் செயல்கள் யாவும் விளையாட்டின் அடிப்படையில்தான் தோன் நின என்பது உலக வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. புதிய