பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-8 அழகும் உண்மையும் முன்னோர் இயலில்’ கவிதை முருகுணர்ச்சியை நல்கு கின்றது என்றும். அந்த முருகுணர்ச்சியில் நாட்டம் செலுத்து பவர்தாம் கவிதையைக் கற்பிக்கத் தகுதியுள்ளவர் என்றும் குறிப் பிட்டோம். அந்த முருகுணர்ச்சியில்-கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பில்’-ஈடுபடுகின்றவரே கவிதை கற்பிக்கத் தகுதியுடைவர் என்று சுட்டி யுரைத்தோம். இத்தகைய முருகில் தான்-அழகில்தான்-உண்மைகள்- வாழ்க்கையின் பல்வேறு உண்மைகள்-பொதிந்து கிடக்கின்றன எ ன் று ம், அதில் நம்பிக்கை கொள்பவர்களே கற்பிப்பதற்குத் தகுதிபெறுகின்றனர் என்பதையும் ஈண்டுக் குறிப்பிட விரும்புகின்றோம். பெரும் பாலும் கவிதை பயிற்றுவோரிடம் இத்தகைய ஒரு நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே பயிற்றுதல் துறையில் அதிகமான வெற்றி காண்பதில்லை. இத்தகைய ஒரு பிரச்சினையைக் கவிதை கற்பிக்கும் சில ஆசிரியர்கள் என்றுமே சிந்தித்துப்பார்க்காமையே இதற்குக் காரணம் என்று கூடக் கருதலாம். இதில் நம்பிக்கை யில்லாமையால் அவர்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை; அதனைச் சோதிக்கவில்லை; அதைப்பற்றிய ஐயமும் அவர்கள் மனத்தில் எழவில்லை. ஒரு வடிவக்கணிதத்திலுள்ள தேற்றம்’ ஒன்றையும், கவிதையொன்றினையும் கற்பிப்பதிலுள்ள வேற்று மையை எண்ணிப்பார்த்தால் இது தெளிவாகப் புலனாகும். தேற்றத்தைக் கற்பிக்கும்பொழுது ஆசிரியர் தாம் கற்பிக்கப் போகும் தேற்றத்தின் உண்மையைத் திட்டமாக அறிந்து கொண்டுள்ளார். எனவே, நம்பிக்கையுடனும் மன உறுதி யுடனும் அதனைக் கற்பிக்கும் பணியில் இறங்குகின்றார். ஆனால் கவிதை கற்பிக்கும் பெரும்பாலோருக்குத் தாம் கற்பிக்கும் கவிதை மேற்கூறிய தே ற் ற த் ைத ப் போ ன் று உண்மை யானதாகத் தோன்றுவதில்லை: அஃது அழகையும் இன் பத்தையும் நல்கவல்லதாக இருப்பினு தேற்றத்தில் பொதிந் துள்ள உண்மையைப்போல், அஃது அவர்கட்குப் புலனாவ தில்லை; அவர்கள் மனத்தைக் கெளவுவதுமில்லை. ஆயின், கவிதை கூறும் உண்மைதான் என்ன? கவிதை வாழ்க்கையின் 1. இயல்: 2 பக்கம்-? 2. வடிவக் கணிதம் .Geometry B. G off pih -Theorem