பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#(; கவிதை பயிற்றும் முறை உண்மைகளைக் கூறுகின்றது. 'கவிதை வாழ்விலிருந்து மலர்ந்தது; வாழ்விற்கே உரியது; வாழ்விற்காகவே நிலை பெற்றுள்ளது” என்று ஹட்சன் என்ற திறனாய்வாளர் கூறுவது ஈண்டுச் சி ந் தி த் த ற் கு ரிய து." பொருள் களின் தன்மைக்கேற்றவாறு காணச் செய்வது அறிவியல்: நடந்ததை நடந்தபடியே உணர்த்துவது வரலாறு, இஃது எப்படி யிருந்தது என்பதைக் கூறுவது. வாழ்க்கை எப்படியிருக்க வேண் டும் என்று கூறுவது கவிதை. அரிஸ்டாட்டில் கூறுவது போல, 'கவிதையின் படைப்புகள் மெய்ம்மையானவை அல்ல; ஆனால், உயர்ந்த உண்மைத் தத்துவம் அமைந்தவை. எப்படி இருக்க வேண்டுமோ அவையேயன்றி எப்படி உள்ளனவோ அவை அல்ல.” இதைப் புரிந்து கொண்டால் கவிதை கூறும் உண்மை ஒருவாறு புலனாகும். ஓர் எடுத்துக்காட்டு மேற்கூறியவற்றைத் தெளிவாக்கும். கம்பநாடனுடைய இராமாயணத்தில் கூறப்பெறும் செய்திகள் அனைத்தும் மெய்ம்மை அன்று; ஆனால் உண்மை. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப்பு ரந்தாள் மதியின் பிழையன்று! மகன் பிழை அன்று மைந்த! விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டது? என்றான்" என்ற கவிதையிலுள்ள வாழ்க்கையின் உண்மையை உணர்ந்தால் கவிதை வாழ்க்கையைத்தான் கூறுகின்றது என்பது தெளிவாகும். வாழ்க்கையில் நாம் காணமுடியாத உண்மைகளை யெல்லாம் கவிஞன் காண்கின்றான். அவற்றைத் தக்க முறையில் காட்டி நம்மையும் காணச் செய்கின்றான்; உணரவைத்து விடுகின்றான். நம்முடைய புலன்கட்கு எட்டாதனவற்றையும் எட்டும்படி செய்து விடுகின்றான் அவன். இன்னோர் எடுத்துக்காட்டைக் காண்போம். மூலபலம் இலங்கையில் வந்து திரளுகின்றது; எல்லாத் திக்குகளிலிருந்தும் எண்ணற்ற அரக்கர்கள் வந்து சேர்கின்றனர். வந்த சேனையின் அளவைக் கணக்கிட்டுக் கூறும்படி கேட்க, அதற்குத் தூதுவர். "இச் சேனையின் அளவு ஆயிரம் வெளளம் என் உரைப்பர் 4 *Poetry is made out of life, belongs to fife, exists for life"-- Hudson: An Introduction to the Study of Literature p 92 5 அயோ, நகர் நீங்கு -129