பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகும் உண்மையும் 8? பித்தர்; கணித நூலிலுள்ள உச்ச எண்ணே இதனை அளவிட் டுரைத்தற்குச் சாலாது” என்று பதிவிறுக்கின்றனர். வெள்ளம்" என்ற அளவினை முதலில் நாம் அறிந்து கொள்ளவேண்டும். தொன்றுதொட்டு வழங்கிய தமிழெண்களையும் இடைக்காலத் தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலங்தை என்ற நிகண்டு நூல் பின்வருமாறு வகைப்படுத்தித் தொகுத்துரைக்கும். 'ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி’ “கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்.’’ 'சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம்' 'விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்.’’ 'குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்.” 'பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு.” “நாடெண் மடங்கு கொண்டது சமுத்திரம்.' சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம்.’’ இம் முறைப்படி நோக்கினால் எட்டாந் தானத்தது கோடி, பதினைந்தாம் தானத்தது சங்கம், இருபத்திரண்டாந் தானத்தது விந்தம், இருபத் தொன்பதாந் தானத்தது குமுதம் (ஆம்பல்), முப் பத்தாறாந் தானத்தது பதுமம் (தாமரை), நாற்பத்து மூன்றாந் தானத்தது நாடு (குவளை), ஐம்பதாந் தானத்தது சமுத்திரம் (நெய்தல்), ஐம்பத்தேழாந் தானத்தது.வெள்ளம் என்பன புலனா கும். இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்ததையை எட்டமுடிய வில்லை. ஆனால், இந்தச் சேனையின் அளவைக் கவிதை உண்மை’யால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழி கைக்குள் இராமன் கணைகளால் அழிந்து படுகின்றது. இதனைக் கம்பங்ாடன், ஆனை ஆயிரம் தேர்பதி னாயிரம் அடல்பரி ஒருகோடி, சேனை காவலர் ஆயிரம் பேர்படின், கவந்தமொன் றெழுந்தாடும்; தானம் ஆயிரம் கவந்தம்நின்று ஆடிடின், கவின்மணி கணில் என்னும்: ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதன்றே" 6. மூல பலவதைப்..செய். 215. க-11