பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அரசர்கள் அமைதியாக வாழ இயலாது. அவர்கள் அடிக்கடி அமர் செய்ய நேரிடும். அந்த முறையில் சோழன் செங்கணானுக்கும் சேரன் கணைக்கால் இரும் பொறையாகிய இவருக்கும் போர் மூண்டது. போரும் மிக்க வீரத்துடன் நடந்தது. இப்போரின் சிறப்பினைப் பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் நூலால் நன்கு அறியலாம். போரின் முடிவு சோழன் செங்கணான் வெற்றி மாலை புனையவும், சேரன் கணைக்கால் இரும் பொறை பையுள்மாலை (துன்பமாலை) சூடவும் நேர்ந்ததே. கணைக்கால் இரும்பொறை சோழனால் பற்றப்பட்டுச் சிறை செய்யப்பட்டார். சேரர் சிறையில் இருந்தபோது, நீர் வேட்கை மிக்கமையின் சிறைக் கோட்டத்தினைக் காவல் புரியும் காவலரை நோக்கித் தமது வேட்கை தீர நீர் தருமாறு கேட்டனர். சிறைப்பட்டவர்கள் மன்னரேயானாலும், சிறைப்பட்டிருக்கும் காரணத்தால் சிறைக் காவலர் மன்னரது வேண்டுகோளை உடனே நிறைவேற்ருது அசட்டையாக இருந்து தாமதம் செய்து, பின்பு நீரைக் கொணர்ந்து நீட்டினர். அப்போதுதான் சேரமான் கணைக்கால் இரும் பொறைக்கு மானத்தின் மேன்மை கருத்தில் உதித்தது. இனி ஒருக் கணமும் உயிருடன் இருத்தல் கூடாது என்று முடிவு கட்டினர். தமது அரசர் மரபின் மேம்பாடும், தாம் உற்றுள்ள சிறுமையும் குறித்துப் பாடி விட்டு